TG Telegram Group Link
Channel: Time pass / fun only / use full tips / songs / rimes / spiritual tamil
Back to Bottom
லை. இதில் ஏதோ தவறு நடந்திருக்கிறது என்று தான் ஊகித்தார் அவர். அவருடைய குழப்பம் நியாயமானது தான். மாக் சென்னெட் பார்த்து ரசித்த 'குடிகார'னுக்கு, நடுத்தர வயது. ஆனால், இப்போது ஒப்பனைகள் ஏதும் இல்லாமல் வந்திருக்கும் சாப்ளினுக்கு, இன்னும் இருபத்தைந்து வயதுகூட நிறையவில்லை. அப்படியிருக்கும் போது, இந்த சின்னப் பையன்தான், தன்னுடைய வயதுக்கு மீறிய வேஷத்தை ஏற்று அப்படி அற்புதமாய் நடித்தான் என்று அவரால் எப்படி நம்பமுடியும் ? (இப்போதும், அந்த நாடகத்தின் பழைய புகைப் படங்களைப் பார்க்கிறபோது, அந்தக் குடிகாரன் வேஷத்தில் நடித்திருப்பது சார்லி சாப்ளின்தானா என்று நம்மால் அடையாளம் காணவேமுடியாது !)



சிறிது நேர சிந்தனைக்குப் பின், எப்படியோ தன்னை சமாதானப் படுத்திக்கொண்டார் மாக் சென்னெட், 'சரி, நாளை நம் ஸ்டூடியோவுக்கு வந்து, வேலைக்குச் சேர்ந்துகொள்.', என்று சாப்ளினிடம் சொன்னார். மறுநாள், தன்னால் முடிந்தவரை கண்ணியமாய் உடுத்திக் கொண்டு, 'கீஸ்டோன்' ஸ்டூடியோவுக்குக் கிளம்பினார் சார்லி சாப்ளின். இனம்புரியாத ஒரு பதட்டம் அவரை ஆக்கிரமித்திருந்தது. அந்தக் கட்டிடத்தை நெருங்கிய போது, அவரால் இயல்பாக நடக்கக் கூட முடியவில்லை. ஸ்டூடியோ வாசலை நெருங்கியபின், சட்டென்று திகைத்து நின்று விட்டார் அவர். அதுவரை அவரைச் செலுத்திக் கொண்டிருந்த தைரியமெல்லாம், இப்போது எங்கோ ஓடி மறைந்துவிட்டது. கால்கள் நகர மறுத்தன. ஸ்டூடியோவினுள் போவதற்கு வெட்கப் படுகிறவர்போல், அங்கேயே சிலையாய்ச் சமைந்து விட்டார் சாப்ளின். கொஞ்ச நேரமாகியும், அவரால் ஒரு முடிவுக்கு வரமுடியவில்லை. ஸ்டூடியோவினுள் சென்று, அங்கிருக்கிறவர்களைச் சந்திக்கிற துணிச்சல் இல்லை. ஆகவே, பேசாமல் தன்னுடைய ஹோட்டல் அறைக்குத் திரும்பி விட்டார்.


மறுநாளும், மூன்றாவது நாளும் இதே கதை தான் நடந்தது. காலை எழுந்தவுடன், ஏதோ வேண்டுதல் போல் ஸ்டூடியோ வாசல் வரை செல்வது, அதற்கு மேல் போவதற்கு தைரியமில்லாமல், ஹோட்டலுக்குத் திரும்பி விடுவது - தொடர்ந்து, ஏதோ ஒரு தயக்கம் அவரைத் தடுத்துக் கொண்டிருந்தது. இப்படியே ஊருக்குத் திரும்பி விடலாமா என்றுகூட யோசிக்கத் தொடங்கி விட்டார் சாப்ளின்.


நல்ல வேளையாக, நான்காவது நாள் காலையில் மாக் சென்னெட் சாப்ளினைத் தொலை பேசியில் அழைத்தார். 'என்னப்பா ? என்னாச்சு ? எங்கே காணாம போய்ட்டே நீ ? நாங்க எல்லாரும் உனக்காகக் காத்திருக்கோம்.' இதைக் கேட்டதும், சாப்ளினுக்குள் ஏதோ ஒரு நம்பிக்கை பிறந்தது. ஸ்டூடியோவினுள் சென்று, ஒரு வருட ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு, முறைப்படி 'கீஸ்டோன்' நிறுவனத்தின் நடிகனாக இணைந்து கொண்டார்.




அன்றிலிருந்து, தினந்தோறும், மற்றவர்கள் வருவதற்கு முன்பாகவே ஸ்டூடியோவுக்குச் சென்று விடுவார் சார்லி சாப்ளின். அங்கிருக்கும் ஒவ்வொரு விஷயத்தையும் ஆச்சரியத்தோடு பார்த்து, ரசித்து, கற்றுக் கொண்டார், பக்கத்திலிருப்பவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொண்டார். ஆனால், அந்தக் கம்பெனியிலிருந்த மற்ற நடிகர்களும், தொழில் நுட்பக் கலைஞர்களும், சாப்ளினை அவ்வளவாய் மதிக்கவில்லை, 'யாரோ ஒரு புதுப் பையன்', என்னும் அலட்சியத்தோடு, அவரைப் புறக்கணித்துக் கொண்டிருந்தார்கள். உண்மையில், இது ஒரு மகா தந்திரம்.



கீஸ்டோனில் புதிதாக வேலைக்குச் சேரும் எந்த நடிகரையும், அவர்கள் இப்படி தான் அலட்சியமாய் நடத்துவார்களாம்.


'நான் பெரிய நடிகனாக்கும்' என்கிற மிதப்பில் வருகிற புதுப் பையன்களையெல்லாம் இப்படி மொத்தமாய் ஒதுக்கி வைத்து, மெல்ல மெல்ல, 'நம்மை இங்கே ஒரு பயலும் மதிப்பதில்லையே', என்று புலம்பும் படி செய்து விடுவார்கள். அதன் பிறகு, அந்தப் பையன்களை, கம்பெனியின் சவுகர்யப்படியெல்லாம் இழுக்க முடியும், 'இப்படி தான் நடிப்பேன்', 'அப்படி நடிக்கமாட்டேன்', என்றெல்லாம் பிடிவாதம் பிடிக்காமல், சொன்னதைச் செய்து விட்டு சும்மா கிடப்பார்கள். இந்தத் திட்டப்படி தான், சாப்ளினும் ஆரம்ப காலத்தில் அலட்சியப் படுத்தப்பட்டார். அவமானப் படுத்தப்பட்டார்.



ஆனால், அதையெல்லாம் பெரிதாய் நினைக்காமல், அவர் தன்னுடைய வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தார். காலையின் முதல் ஆளாக ஸ்டூடியோவினுள் நுழைகிற சாப்ளின், மாலை மயங்கி, இரவு தொடங்கிய பின், கடைசி ஆளாக வெளியேறுவாராம். அதுவரை, அந்த வளாகத்திலேயே சுற்றி வந்து, கதை விவாதம், படப்பிடிப்பு, எடிட்டிங் போன்ற பல்வேறு விஷயங்களைக் கூர்ந்து கவனித்துக் கொண்டிருப்பார். ஆரம்பத்தில் அவரைச் சாதாரணமாய் நினைத்தவர்கள் கூட, அவருடைய ஆர்வத்தையும், கடின உழைப்பையும் பார்த்து அசந்து போனார்கள். இப்படி ஏகப்பட்ட விஷயங்களைக் கற்றுக் கொண்டாலும், தனக்கு இன்னும் நடிக்கிற வாய்ப்பு கிடைக்கவில்லையே என்ற ஆதங்கம் சார்லி சாப்ளினுக்கு இருந்தது. இப்படியே போனால், சில நாள் கழித்து நம்மை வெளியே துரத்தி விடுவார்களோ என்றுகூட பயப்பட்டார். நல்ல வேளையாக, அவருடைய எதிர்மறைக் கற்பனைகள் எதுவும் நிஜமாகவில்லை.


'Making a Living' என்னும் திரைப்படத்தில் நடிக்கத் தேர்வானார்
சாப்ளின் சித்தரித்துக் காட்டியும் கூட, கிளிப்பிள்ளை போல் 'இது போதாது', 'இது போதாது' என்று தான் திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருந்தார் அவர்.


ஒரு கட்டத்தில், சாப்ளினுக்கே இந்த விளையாட்டு அலுத்து விட்டது. நிஜமாகவே இந்த முதலாளி என்னிடம் ஏதேனும் ஒரு புதிய வேஷத்தை எதிர்பார்க்கிறாரா, அல்லது, என்னை மொத்தமாய் ஒழித்துவிடத் திட்டம் தீட்டியிருக்கிறாரா ? இப்படி அவர் சந்தேகமாய் யோசித்துக் கொண்டிருக்கும் போது, யதேச்சையாய், மிக யதேச்சையாய் அவருக்கு ஒரு அற்புதமான யோசனை தோன்றியது. அதை 'யோசனை' என்று கூட சொல்லமுடியாது. ஒரு சின்ன சிந்தனைப்பொறி, அவ்வளவு தான்.


அந்த அக்கினிக் குஞ்சை நன்றாக ஊதிப் பெரிதாக்கியது, சாப்ளினின் புத்திசாலித்தனம். அவருக்குத் தோன்றிய அந்த யோசனை, மிகவும் எளிமையானது.


பொதுவாக எல்லோருமே கச்சிதமாக உடை உடுத்த வேண்டும். அதற்குப் பொருத்தமாக நன்றாக அலங்காரம் செய்து கொள்ள வேண்டும் என்று தான் நினைப்பார்கள். ஆனால், இதற்கு நேரெதிராக, ஒரு ஆள், கன்னா பின்னாவென்று, சம்பந்தா சம்பந்தமில்லாமல் உடுத்திக் கொண்டு வெளியே நடமாடினால் ?


தான் இப்படி அபத்தமாய் உடையணிந்திருக்கிறோம் என்று தெரியாதவன் போல், அவன் சகஜமாய் எல்லோருடனும் பேசிப் பழகினால் ? இந்தச் சிறிய கற்பனையில், ஏகப்பட்ட நகைச்சுவைக் காட்சிகளுக்கான சாத்தியங்கள் சாப்ளினின் மனக்கண்ணில் தெரிந்தன.


பரபரவென்று, அபத்தமான உடை அலங்காரங்களைத் தேடத் தொடங்கினார் அவர்.


முதலாவதாக அவருடைய கண்ணில் மாட்டியவர் ரோஸ்கோ ஆர்பக்கிள் (Roscoe Arbuckle) என்ற சக நடிகர். சாப்ளினின் மெலிந்த தோற்றத்துக்கு நேரெதிராக, கொழுகொழுவென்று சதைப் பிடிப்பாய் இருப்பவர் ஆர்பக்கிள், (இதனால் அவருக்கு 'குண்டு ஆர்பக்கிள்' என்று செல்லப் பெயரும் உண்டு.) அந்த அர்பக்கிளிடமிருந்து, அவருடைய கால் சட்டையை வாங்கிக் கொண்டார் சாப்ளின். அதை அவர் அணிந்து கொண்டபோது, தொள தொளாவென்று மிக விநோதமாய் இருந்தது. இந்த 'தொளதொளா' பேன்டுக்கு நேரெதிராக, ஒரு இறுக்கமான மேல் சட்டையைத் தேர்ந்தெடுத்து அணிந்து கொண்டார் சார்லி சாப்ளின். இந்தச் சட்டை, சார்லஸ் ஏவ்ரி (Charles Avery) என்ற இன்னொரு நடிகரின் உபயம். அடுத்ததாக, கால்களுக்கு ஏதாவது அணிய வேண்டும். சாதாரணமான ஷு அல்லது செருப்பு அணிந்தால் மக்கள் சிரிப்பார்களா ? அங்கேயும் ஏதாவது வித்தியாசம் காட்ட வேண்டும் என்று யோசித்து, ஃபோர்ட் ஸ்டெர்லிங் (Ford Sterling) என்ற நடிகரின் மிகப் பெரிய ஷுக்களை வாங்கி அணிந்து கொண்டார் சாப்ளின். (அந்தக் காலணிகள் சாப்ளினின் சின்னக் கால்களில் நிற்கவே இல்லை. அடிக்கடி கழன்று விழுந்து கொண்டே இருந்தன. ஆகவே, வலது கால் ஷுவை, இடது காலிலும், இடது கால் ஷுவை, வலது காலிலுமாய் மாற்றி அணிந்து சமாளிக்க வேண்டியிருந்தது. இதுவும் ஒரு நகைச்சுவை அம்சமாய் அமைந்துவிட்டது.) குண்டு அர்பக்கிளின் மாமனார், 'டெர்பி' என்று அழைக்கப்படும் ஒரு விளையாட்டுத் தொப்பியை அணிந்திருப்பார். இப்போது அந்தத் தொப்பி, அர்பக்கிளிடம் தான் இருந்தது. அந்தச் சிறிய தொப்பியை வாங்கித் தலையில் கவிழ்த்துக் கொண்டார் சார்லி சாப்ளின். கையில் தன்னுடைய பிரம்புத் தடியை எடுத்து சுழற்றிக் கொண்டார். கடைசியாக, முகத்துக்கு ஏதாவது செய்ய வேண்டுமா என்று யோசித்தார் சாப்ளின். எதுவும் தேவையில்லை என்று தான் தோன்றியது. ஆனால், தன்னுடைய இப்போதைய உருவத்தைக் கண்ணாடியில் பார்த்த போது, ஏதோ குறைபடுவதாய்த் தோன்றியது. கொஞ்சம் யோசித்ததும், அந்தக் 'குறை' என்னவென்று அவருக்குத் தெரிந்து விட்டது. ஏற்கெனவே ஒல்லிப் பிச்சானாகவும், குள்ளமாகவும் இருக்கும் சாப்ளின், இந்த விநோத அலங்காரங்களால், மேலும் சின்னப் பையனாகத் தெரிந்தார்.


முதலாளிக்கு இது பிடிக்குமோ, பிடிக்காதோ. சின்னப் பையனை எப்படிப் பெரிய பையனாக்குவது ? ரொம்ப சுலபமான யோசனை, அவனுக்கு ஒரு மீசை வரைந்து விடுவது தான் ! ஆகவே, ஒரு போலி மீசையைத் தேர்ந்தெடுத்து, முகத்தில் ஒட்டிக் கொண்டார் சாப்ளின். ஆனால், இப்போது வேறொரு புதிய பிரச்சனை. மூக்குக்கும், வாய்க்கும் நடுவில் அபத்திரமாய்த் தொற்றிக் கொண்டிருக்கும் இந்த மீசை, அவருடைய முக பாவனைகளையும், உணர்ச்சி வெளிப் பாடுகளையும் தடைசெய்வதாக சாப்ளினுக்குத் தோன்றியது. என்ன செய்யலாம் ? மீசையைச் சின்னதாக்கலாம். அந்த ஒட்டு மீசையின் இரண்டு பக்கங்களையும் சம அளவு கத்தரித்து எறிந்தார் சாப்ளின். இப்போது, அவருடைய சிரிப்பும், சோகமும் பளிச்சென்று முகத்தில் தெரிந்தது. என்றாலும், இந்த மீசை இன்னும் கொஞ்சம் சிறிதாக இருக்கலாமே என்று அவருக்குத் தோன்றியது. ஆகவே, மறுபடி மீசையைக் கத்தரித்தார். கண்ணாடியில் பார்த்தார், இன்னும் கொஞ்சம் கத்தரித்தார், கண்ணாடியைப் பார்த்தார், மேலும் கத்தரித்தார், மறுபடி பார்த்தார், கத்தரித்தார், பார்த்தார், கத்தரித், பார்த்,. கத்தரி, பார், ... கடைசியில், அந்த மீசை மிகச் சிறியதாகி விட்டது - மூக்குக்குக்கீழே, ஒரு டூத் பிரஷ் முனையைக் கறுப்புச் சாயத்தில் தோய்த்து ஒட்
*இப்படிக்கு 🏹 காலம்*

*பகிர்வு*

*┈┉┅━❀•ℙᏉᎫℙ•❀━┅┉┈​​​​​​​​​​*

*இணையற்ற நகைச்சுவை நாயகன் சார்லி சாப்ளின் வாழ்க்கை வரலாறு!*


என். சொக்கன்.


*6. The Tramp*


சாப்ளினின் முதல் படம் வெளிவந்த கையோடு, பெட்டிக்குள் தோல்விகரமாய்ச் சுருண்டது. ஆகவே, அவருக்கு எதிராகப் போர் தொடுத்திருந்தவர்கள் எல்லோரும் புதிய வேகத்தோடு அவரை மீண்டும் தாக்கத் தொடங்கினார்கள். 'இந்த ஆள் சரிப்பட மாட்டான், வெத்து வேட்டு, இவனைத் தூக்கி முதல்ல வெளியே வீசுங்க', என்று பிடிவாதமான கோரிக்கைக் குரல்கள் எழுந்தன. ஆனால், அந்த 'எதிரி'களை சாப்ளின் அவ்வளவாய்க் கண்டு கொள்ளவில்லை. இந்தப் படம் ஓடாவிட்டால், அதற்கு நான் காரணமில்லை என்ற கருத்தில் அவர் மிகத் தெளிவாக இருந்தார்.


படப் பிடிப்பின் போதே, அவர் பல நல்ல யோசனைகளைச் சொல்லியிருந்தார், ஆனால், அவருடைய இயக்குநர் அதையெல்லாம் கவனிக்கவில்லை. பிறகு, வெறும் நடிகர், அவர் என்ன தான் செய்து படத்தைத் தூக்கி நிறுத்தி விடமுடியும் ? இப்படி அவர் பேசிக் கொண்டிருக்க, விவகாரம் மீண்டும் மாக் சென்னெடிடம் சென்றது. 'இந்தப் பையன் பெரிய கலாட்டாக்காரனாய் இருக்கிறானே', என்று முகம் சுளித்த அவர், சாப்ளினை இங்கே வேலைக்குச் சேர்த்தது தவறோ என்று தீவீரமாய் யோசிக்க ஆரம்பித்தார். சீக்கிரத்திலேயே, முதலாளியிடமிருந்து சார்லி சாப்ளினுக்கு 'சம்மன்' போனது. அவரைத் தனியே அழைத்து, 'இப்போ நீ என்ன தான் சொல்றே ?', என்று அதட்டி விசாரித்தார் சென்னெட்.


சார்லி சாப்ளின் பயப்படாமல், தன் தரப்பு நியாயத்தை எடுத்துச் சொன்னார். 'நான் என்னென்னவோ யோசனைகள் சொன்னேன். அதையெல்லாம் இந்த டைரக்டர் குப்பையில் வீசிவிட்டார்', என்று ஆதங்கத்தோடு குறிப்பிட்டார். அவருடைய வாதத்தை மாக் சென்னெட் ஏற்கவில்லை. 'எந்தப் படமானாலும், இயக்குனர் தான் ராஜா, படத்தில் எந்தக் காட்சிகள் இடம் பெறவேண்டும், எதெல்லாம் இடம்பெறக் கூடாது என்று முடிவு செய்ய வேண்டியது அவர் தான். அவர் சொல்வதைக் கேட்டு நடிப்பது மட்டும் தான் நடிகர்களின் வேலை', என்றார் அவர்.
என்றாலும், சாப்ளினின் தைரியமான பேச்சும், சினிமாவில் புதுமையான நகைச் சுவையைக் கொண்டு வரவேண்டும் என்று அவர் அடிக்கடி சொன்னதும், மாக் சென்னெடின் கவனத்தைக் கவர்ந்தது. இந்தப் பையன் நிஜமாகவே விஷய ஞானத்தோடு தான் பேசுகிறானா, அல்லது சும்மா வாய்ச்சொல் வீரனா என்று சோதித்துத் தெரிந்து கொள்ள விரும்பினார் சென்னெட்.


ஆகவே, 'கீஸ்டோன்' நிறுவனத்தின் அடுத்த படத்தைப் பற்றிப் பேசும் போது, அவர் சாப்ளினை அழைத்து, ஒரு சவாலை முன் வைத்தார். 'இந்தப் படத்தில் சில நல்ல நகைச் சுவைக் காட்சிகள் தேவைப் படுகிறது. அதையெல்லாம் சரியாகச் செய்வதற்கு, ஒரு முக்கியமான கதாபாத்திரம் வேண்டும் - அந்தக் கதாபாத்திரத்தைப் பார்த்ததுமே, மக்களுக்குப் பிடித்துப் போக வேண்டும். அப்படியொரு புதுமையான வேடத்தைச் செய்து காட்டு பார்க்கலாம். அவர் சொன்னதை மனதில் அசை போட்டபடி நடிகர்களின் ஓய்வு அறைக்குத் திரும்பினார் சாப்ளின். இது தான் தனக்குக் கிடைத்திருக்கும் கடைசி வாய்ப்பு. இதைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டால் தான், இந்த சினிமாத்து றையில் தொடர்ந்து குப்பை கொட்ட முடியும் என்று அவருக்கு நன்றாகப் புரிந்திருந்தது.


ஆகவே, எந்த மாதிரியான வேஷம் போட்டால், முதலாளிக்குப் பிடிக்கும் என்று யோசித்தார் சாப்ளின். அவருக்கும் பிடிக்க வேண்டும், மக்களுக்கும் பிடிக்க வேண்டும். அப்படிப்பட்ட ஒரு வித்தியாசமான வேஷம் வேண்டும் ! கிடைக்குமா ? சிறிது நேரம் தீவீரமாய்ச் சிந்தித்த பின், அவருக்கு ஒரு நல்ல யோசனை தோன்றியது. சார்லி சாப்ளின் எப்போதோ நடித்த ஒரு 'குடிகார' வேஷம் தான். மாக் சென்னெடுக்கு ரொம்பப் பிடித்திருந்தது. அதை மறக்காமல் நினைவில் வைத்திருந்து தான், சாப்ளினை 'கீஸ்டோன்' நிறுவனத்துக்கே அழைத்து, நடிக்கும் வாய்ப்புக் கொடுத்திருக்கிறார். அந்த அளவுக்கு அவர் மனதில் பதிந்துவிட்ட அந்தக் குடிகார வேஷத்தை, இப்போது மீண்டும் அவருக்கு நடித்துக் காட்டினால் என்ன ? இந்த எண்ணத்துடன், தனக்கு 'வாழ்வு கொடுத்த' அந்த நடுத்தர வயது வேஷத்தை மீண்டும் அணிந்து கொண்டார் சார்லி சாப்ளின்.


பழைய லண்டன் மேடை ஞாபகங்கள் அவரை ஆக்கிரமிக்க, அதே வேகத்துடன், அதே புத்துணர்ச்சியுடன், அந்தக் குடிகாரனுக்குள் புகுந்து கொண்டார். ஆனால், அவருடைய நடிப்பைப் பார்த்துக் கொண்டிருந்த மாக் சென்னெடுக்கு, இப்போது அந்தக் குடிகார வேஷம் அவ்வளவாய்ப் பிடிக்கவில்லை. மெல்ல உதட்டைப் பிதுக்கி, தன்னுடைய திருப்தியின்மையைத் தெரிவித்தார் அவர், 'இது சரிப்படவில்லை சாப்ளின், வேறு ஏதாவது முயற்சி செய்' சாப்ளினுக்குப் பெருத்த ஏமாற்றம். ஆனால், முதலாளிக்கு முன்னால் அதையெல்லாம் காட்டிக் கொள்ளவா முடியும். மீண்டும் ஒப்பனை அறைக்குச் சென்று, வேறொரு வேஷத்தை அணிந்து திரும்பினார். இந்த முறையும், மாக் சென்னெடுக்குத் திருப்தியில்லை. திரும்பத் திரும்ப, வெவ்வேறு வேஷங்களுடன், வெவ்வேறுவிதமான நகைச்சுவைக் காட்சிகளை
கும், சாப்ளின் சொல்லும் யோசனைகள் எதுவும் மோசமானவை அல்ல. மேடை நாடகக் காலத்திலிருந்தே, எது செய்தால், எப்படிச் செய்தால் மக்கள் சிரிப்பார்கள் என்று துல்லியமாக நாடி பிடித்து அறிந்திருந்த கலைஞர் அவர். அந்த அனுபவத்திலிருந்துதான், அவருடைய புதுப்புது நகைச்சுவைச் சிந்தனைகள் பிறந்தன, அவற்றை ஏற்று ஆதரிக்கதான் ஆளில்லை. மாக் சென்னெடைத் தவிர, 'கீஸ்டோன்' நிறுவனத்திலிருந்த எந்த இயக்குனரோடும் சாப்ளினால் ஒத்துப் போக முடியவில்லை.




காரணம், சாப்ளின் சொல்லும் யோசனைகள், புதுப்புது காட்சி அமைப்புகள் - அவர் எது பேசினாலும், 'நேரம் இல்லை' என்றோ, 'இதெல்லாம் மேடையில் நடிக்கத் தான் சரிப்படும்' என்றோ ஒதுக்கித் தள்ளி விட்டு, தாங்கள் நினைத்தது போல் தான் படத்தை எடுத்தார்கள் அவர்கள். ஒரு வேளை, சாப்ளின் ரொம்பப் பிடிவாதம் பிடித்தால், அவர் விரும்புவது போல் காட்சியைப் படமாக்கி விட்டு, பின்னர் எடிட்டிங்கின் போது அதை வெட்டித் தள்ளி விடுவார்கள். இதையெல்லாம் நினைக்க நினைக்க, சாப்ளினுக்கு ஆதங்கம் கூடியது. போதாக்குறைக்கு, அவருடைய சில படங்களுக்கு, ஒரு இளம் பெண்ணை இயக்குனராக நியமித்தார்கள்.




இதில் சாப்ளினுக்குக் கொஞ்சமும் சம்மதமில்லை, 'அந்தப் பெண்ணுக்குமட்டும் என்ன பெரிய அனுபவம் இருக்கிறது என்று அவரை டைரக்ஷன் செய்ய அனுமதிக்கிறார்கள் ?', என்று தனக்குள் பொறுமினார். அவ்வப்போது மாக் சென்னெடை நேரில் சந்தித்த சாப்ளின், 'தனக்கு மேலும் சுதந்திரம் தேவை', என்று விடாமல் வலியுறுத்திக் கொண்டிருந்தார். ஆகவே, ஒரு கட்டத்தில், அவரை உதவி இயக்குனராகப் பதவி உயர்த்தினார் சென்னெட். சாப்ளினின் திரை வாழ்க்கையில் முக்கியமான மாற்றம் அது. இனிமேல் அவர் வெறுமனே நடித்துவிட்டுப் போகாமல், தனக்குத் தோன்றும் யோசனைகளை இயக்குனரிடம் தைரியமாக சொல்ல முடியும். சாப்ளின் தான் உதவி இயக்குனர் என்பதால், 'போய்யா சர்த்தான்' என்று இயக்குனர் அவரைச் சுலபத்தில் நிராகரித்து விடமுடியாது. அவர் நடிக்கும் காட்சிகளை இஷ்டத்துக்கு வெட்டித் தள்ள முடியாது. அவர் சொல்லும் யோசனை நன்றாக இருந்தால், கண்டிப்பாக படத்தில் சேர்க்கப்படும். தன்னுடைய படங்களை இன்னும் கொஞ்சம் நன்றாகச் செதுக்கி வெளியிடுவதற்கு வாய்ப்புக் கிடைக்காதா என்று ஏங்கிக் கொண்டிருந்த சார்லி சாப்ளினுக்கு இது போதாதா ?




அடுத்து வெளிவந்த 'கீஸ்டோன்' படங்களில், சாப்ளினின் மேதைமை நன்றாக வெளிப்படத் தொடங்கியது. இப்படியாக, 'கீஸ்டோன்' நிறுவனத்தில் சேர்ந்த முதல் மூன்று மாதங்களுக்குள், பத்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்து முடித்து விட்டார் சாப்ளின். வாரம் ஒரு படமா என்று வாயைப் பிளக்க வேண்டாம் - அப்போதெல்லாம் ஒரு 'திரைப்படம்' என்பது, ஒரு ரீல், அல்லது மிஞ்சிப் போனால் இரண்டு ரீல். அவ்வளவு தான். மொத்தம் பதினைந்து அல்லது இருபத்தைந்து நிமிடங்களுக்குள் மொத்தப் படமும் ஓடி முடிந்துவிடும். ஆகவே, ஐந்தாறு நாள்கள் படப்பிடிப்பு நடித்தினால் போதும், ஒரு படத்தைத் தயாரித்து வெளியிட்டு விடலாம் !



தவிர, அந்தக் காலப் படங்களில் சப்தம் கிடையாது. எல்லாமே மௌனப் படங்கள் தான். ஆகவே, வசனம் எழுதுவது, பின்னணி இசை கோர்ப்பது போன்ற வேலைகள் இல்லை. இயக்குனர் மனதில் ஏதேனும் ஒரு நல்ல யோசனை அல்லது காட்சி தோன்றி விட்டால், நேராகப் படப்பிடிப்புக்குச் சென்று, ஒன்றிரண்டு முறை ஒத்திகை பார்த்து விட்டு, படமாக்கி முடித்து விடுவார்கள். இந்த 'அவசரம்', சாப்ளினுக்குப் பிடிக்கவில்லை. இப்படிப் பரபரவென்று படமெடுப்பதால் தான், கீஸ்டோன் ஸ்டூடியோ முழுவதும், தேர்தல் காலப் பொதுக்கூட்டம் போல ஒரு ஒழுங்கில்லாமல் கலைந்து கிடக்கிறது என்று நினைத்தார் அவர்.



நல்ல காட்சிகளை நிதானமாய்த் திட்டமிட்டு, நன்றாக ஒத்திகை பார்த்துப் படமெடுத்தால், இன்னும் சிறப்பான படங்களைத் தயாரிக்கமுடியும் என்பது அவருடைய நம்பிக்கை. ஆனால், அங்கிருந்த இயக்குனர்கள் யாரும் சாப்ளினின் கருத்தை மதிக்கவில்லை. எப்போதும் போல் அவசரப் படங்களை எடுத்துக் குவித்துக் கொண்டிருந்தார்கள். சாப்ளினும், வேண்டா வெறுப்பாக அந்தப் படங்களில் நடித்துக் கொண்டிருந்தார். சீக்கிரத்திலேயே, சார்லி சாப்ளினுக்கு இயக்குனராகும் வாய்ப்புக் கிடைத்தது.



ஆனால், அவருடைய முதல் படம் எது என்பதில் தான் கொஞ்சம் குழப்பம். சாப்ளின் எழுதிய சுயசரிதையில், தான் இயக்கிய முதல் படம், 'Caught in the Rain' என்று குறிப்பிட்டிருக்கிறார். ஆனால், அவர் தன்னுடைய சகோதரர் சிட்னிக்கு எழுதிய கடிதமொன்றில், அதற்கு முன் வெளிவந்த 'Twenty Minutes of Love' என்ற படத்தை, தன்னுடைய படம் என்று எழுதியிருக்கிறார். அதன்படி பார்க்கும் போது, அது தான் இயக்குனர் சாப்ளினின் முதல் படமாக இருக்க வேண்டும். எது எப்படியோ, சாப்ளினின் நெடு நாள் கனவு பலித்தது. அவர் இயக்குனராகி விட்டார். காமாசோமாவென்று படம் எடுத்துக் குவிக்காமல், பொறுமையாய்ச் சிந்தித்து, நல்ல படங்களாக எடுக்க வேண்டும் என்ற ஆசையுடன், தனது முதல் படத்தைத் தொடங்கினார். அந்தப் படம
பணத்தை எடுத்துக் கொள்ளலாம்.' அதுவரை ஒரு திரைப்படத்தைக் கூட இயக்கியிருக்காத, ஒரு இயக்குநரிடம் கூட உதவியாளராய்ப் பணியாற்றியிருக்காத சாப்ளின், இது போன்ற ஒரு 'வாழ்வா, சாவா' சவாலுக்குத் துணிந்திருக்கிறார் என்றால், அவருக்குத் தன்னுடைய திறமையில் எப்படியொரு நம்பிக்கை இருந்திருக்க வேண்டும் என்று நாம் ஊகித்துக் கொள்ளலாம். அது தான் சாப்ளின் !



சிறு வயது முதலே, அவருக்குத் தன்னுடைய திறமையில் அசைக்க முடியாத நம்பிக்கை இருந்தது. மிகவும் சிரமமான காலகட்டங்களில் கூட, வாழ்க்கை வசதிகள் இல்லையே என்று தான் அவர் கவலைப்பட்டாரேயொழிய, தன்னால் ஜெயிக்க முடியாதோ என்று அவர் சந்தேகப் பட்டதில்லை. அந்த நம்பிக்கை தான், இப்படியொரு பெரிய 'ரிஸ்க்' எடுக்கும்படி அவரைத் தூண்டியது.



சார்லி சாப்ளினின் இந்தத் தன்னம்பிக்கையை மாக் சென்னெட் ரசித்தார், மதித்தார். என்றாலும், உடனடியாக அவருக்கு இயக்குநர் வாய்ப்புத் தரவில்லை. 'இன்னும் கொஞ்ச காலம் போகட்டும்', என்று விஷயத்தை ஆறப் போட்டார். அதேசமயம், சார்லி சாப்ளினின் 'Tramp' கதாபாத்திரத்தை முன்வைத்து, அடுத்தடுத்த திரைப்படங்கள் தயாரிக்கப்பட்டன. பெரும்பாலான படங்களில் 'சும்மா' வந்து போகிற வேஷம் தான். என்றாலும், தன்னுடைய வித்தியாசமான அணுகுமுறை, புதுமையான நகைச்சுவை பாணியின் மூலம் மக்களிடையே பரவலாய் நல்ல வரவேற்பைப் பெற்றார் சார்லி சாப்ளின். உண்மையில், அவருடைய பெயர்கூட ரசிகர்கள் மனதில் அவ்வளவாய்ப் பதியவில்லை. விநோதமாய் உடுத்தியிருந்த அவருடைய கதாபாத்திரம் தான் சட்டென்று எல்லோருக்குள்ளும் இடம் பிடித்து விட்டது.




தியேட்டர் வாசல்களில், சாப்ளினின் 'Tramp' உருவத்தை மட்டும் ஓவியமாய்த் தீட்டி வைத்தார்கள். அதைப் பார்த்ததும், மக்கள் கூட்டம் வந்து குவிந்தது, விழுந்து விழுந்து சிரித்து ரசித்தது. சென்ற அத்தியாயத்திலிருந்து, 'Tramp' என்ற வார்த்தையை அடிக்கடி கேட்கிறோம்.



யார் அந்த Tramp ? அகராதியைப் புரட்டி, 'Tramp' என்னும் வார்த்தைக்கு அர்த்தம் கேட்டால், முழநீளத்துக்கு விளக்கம் கிடைக்கிறது. வீடு இல்லாதவன், வேலை இல்லாதவன், பரம ஏழை, ஒரு இலக்கில்லாமல் நெடுந்தூரம் பயணிப்பவன், எங்கே சென்றாலும் நடந்தே செல்பவன். ஏதாவது எடுபிடி வேலைகள் கிடைத்தால், அதைச் செய்வான், இல்லாவிட்டால், பிச்சை எடுப்பான் ... - இதையெல்லாம் படிக்கும்போது, 'Tramp' என்று குறிப்பிடப்படும் அந்த மனிதர்கள் மீது நமக்குப் பரிதாபம் தான் வருகிறது. ஆனால், அந்தப் பரிதாபத்தையே, தன்னுடைய நகைச்சுவைக்குப் பயன்படுத்திக் கொண்ட புத்திசாலிக் கலைஞர் சார்லி சாப்ளின்.




அவருடைய ஆரம்ப காலப் படங்கள் ஒன்றிரண்டு, கடைசிப் படங்கள் நான்கு - இவற்றைத் தவிர, மற்ற அனைத்து படங்களிலும், இந்த 'Tramp' வேஷத்தைத் தான், வெவ்வேறு விதமாய்ச் செய்திருக்கிறார் சார்லி சாப்ளின். தொடக்கத்தில் சாதாரணமான கோமாளியாக ஆரம்பித்த இந்தக் கதாபாத்திரம், மெல்ல மெல்ல வடிவம் பெற்று, முதிர்ச்சியடைந்து, பலவிதமான உணர்வுகளைப் பெற்று, ரசிகர்களை குலுங்கிக் குலுங்கிச் சிரிக்க வைத்து, பின்னர், உணர்ச்சி வயப்பட்டு அழவைத்து, பத்து ஆண்டுகளுக்குள் சாப்ளினின் இந்த வேஷம் சாகாவரம் பெற்று விட்டது !



ஆனால், அது வரை சார்லி சாப்ளின் ரொம்பவே கஷ்டப்பட வேண்டியிருந்தது. அவருடைய அதீத புத்திசாலித்தனமும், புதிய முயற்சிகளும், அவருடைய கம்பெனியில் அவருக்குக் கெட்ட பெயரைத் தான் தேடித் தந்தன. அவருடைய டைரக்டர்களுக்கு அவரைப் பிடிக்கவில்லை. சக நடிகர்களுக்கும் அவரைப் பார்த்தால் பொறாமை. அவர் ரொம்ப அழுக்காக இருக்கிறார். ஒழுங்காய்க் குளிப்பதில்லை. பல நாள்களுக்கு, ஒரே துணியைத் துவைக்காமல் மீண்டும், மீண்டும் அணிகிறார் என்றெல்லாம் குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டன. சிறுவயது போலவே, இங்கேயும் சாப்ளினுக்கு நண்பர்களே இல்லை. அதற்காக சாப்ளின் வருத்தப்பட்டுக் கொண்டு சும்மா இருந்து விடவில்லை. இன்று இல்லாவிட்டாலும், நாளை தனக்கு 'இயக்குநர்' பதவி கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன், தன்னுடைய படத்துக்கான புதுப்புது கதைகள், வித்தியாசமான கதாபாத்திரங்கள், காட்சி அமைப்புகள் என்று மனதினுள் ஒரு இயக்குனராகவே வாழ்ந்து கொண்டிருந்தார் அவர்.



படப்பிடிப்பு இல்லாத சமயங்களில் கூட, அவர் வம்பு வழக்குகளைத் தேடிப் போவதில்லை. ஏதேனும் ஒரு புத்தகத்தைப் படித்துக் கொண்டு ஒரு ஓரமாய் அமர்ந்திருப்பார். யாரேனும் அவரிடம் பேசினால் பதில் பேசுவார். மற்றபடி அவருடைய உலகம் தனி. ஆனால் அதே சமயம், சாப்ளின் எத்தனை தான் முயன்றாலும், அவரால் 'வெறும்' நடிகராக மட்டும் இருந்து விட்டுப் போக முடியவில்லை. அவர் நடிக்கும் படங்களிலெல்லாம், அவருக்கு ஒவ்வொரு காட்சி விவரிக்கப்படும் போதும், இதையே வேறு விதமாய்ச் செய்தால் இன்னும் நன்றாக இருக்குமே என்றுதான் அவருடைய சிந்தனை ஓடியது. அதைத் தனக்குள் வைத்துக் கொள்ளாமல், தன்னுடைய படத்தின் இயக்குனர்களிடம் சொல்ல, அவர்கள் கோபமாகிக் கத்துவார்கள். மறுபடி ஒரு கலாட்டா தொடங்கும். இத்தனைக்
் முடியும் வரை, சாப்ளினுக்கு நிம்மதியே இல்லை. கஷ்டப்பட்டு, சண்டை போட்டு டைரக்ஷன் வாய்ப்பு வாங்கியிருக்கிறோம், படம் ஒழுங்காக வரவேண்டும், வாய்ப்புக் கொடுத்த மாக் சென்னெடுக்குப் பிடிக்க வேண்டும், மக்களுக்குப் பிடிக்க வேண்டும் என்ற பதட்டம் தான் அவரைச் செலுத்திக் கொண்டிருந்தது. ஒரு வழியாக அந்தப் படம் நிறைவடைந்து, வெளியாகத் தயார் நிலையில் நின்றது.



தயாரிப்பாளர் மாக் சென்னெட், படத்தைப் பார்க்க வந்தார். மிகவும் எளிமையான, நேரடியான பாணியில், ஆனால் மிகுந்த நேர்த்தியுடன் தயாரிக்கப் பட்டிருந்த சார்லி சாப்ளினின் அந்தப் படத்தை, மாக் சென்னெட் ரசித்துப் பார்த்தார். படம் முடிந்ததும், சாப்ளினை அருகில் அழைத்து, 'என்ன சார்லி ? அடுத்த படம் எப்போது ஆரம்பிக்கப் போகிறாய் ?', என்று உற்சாகமாய்க் கேட்டார் அவர். சென்னெடின் சந்தோஷ முகத்தைப் பார்க்கும் போது, தான் ஜெயித்து விட்டோம் என்று சாப்ளினுக்குப் புரிந்தது. அந்தப் படம் பெரிய வெற்றி என்று சொல்ல முடியாது. ஆனாலும், அதன் பிறகு, ஒன்றிரண்டு படங்களைத் தவிர, சாப்ளின் நடித்த எல்லாப் படங்களையும், அவரே தான் இயக்கினார். வேறு எந்த இயக்குனரின் கட்டுப்பாடுகளுக்குள்ளும் அகப்படாமல், பூரண சுதந்திரத்துடன், தான் விரும்பிய வண்ணம் திரைப் படங்களைத் தந்தார் அவர். மக்களும் அவருடைய பாணியை விரும்பி ஏற்றுக் கொண்டார்கள். சினிமா உலகின் நுணுக்கங்கள் அனைத்தும் சாப்ளினுக்கு ஒரே நாளில் புரிந்து விட்டதாக சொல்ல முடியாது. என்றாலும், கடின உழைப்புக்கு அஞ்சாதவர் அவர். தன்னுடைய மேடை நாடக நடிப்பு பாணியை, திரைப்படங்களுக்கு ஏற்றபடி மாற்றிக் கொண்டாற்போல், ஒரு திரைப்படத்தை எப்படி இயக்கவேண்டும் என்ற கலையையும், படிப்படியாய்க் கற்றுத் தெரிந்து கொண்டார் அவர். அந்தக் காலகட்டத்தில், சாப்ளினின் ஒவ்வொரு படத்திலும், அவருடைய முன்னேற்றத்தைப் பார்க்கமுடியும். குறிப்பாக, அவருடைய 'Tramp' கதாபாத்திரத்தை, மக்கள் மனதில் நன்றாகப் பதியும்படி உருவாக்கினார் அவர். அவர் எதிர்பார்த்தது போல், அந்த அப்பாவிக் கதாநாயகனை எல்லோருக்கும் பிடித்துப் போனது. 'இன்னும் இன்னும், சாப்ளின் படங்கள் நிறைய வேண்டும் !', என்று விநியோகஸ்தர்களும், ரசிகர்களும் குறிப்பிட்டுக் கேட்கத் தொடங்கினார்கள். ஆகவே, அவர்கள் படங்களைப் பார்த்து ரசித்த வேகத்துக்கு, சாப்ளினும் படங்களை எடுத்துக் குவிக்க வேண்டியிருந்தது. இதை அவர் விரும்பாவிட்டாலும், மற்ற இயக்குனர்களைப்போலவே அதிவேகமாய்ப் படமெடுத்து வெளியிடுகிற கட்டாயம் அவருக்கு உண்டாகி விட்டது. ஆனாலும், அந்த வேகத்துக்குத் தன்னுடைய விவேகம் பலியாகி விடாதபடி பார்த்துக் கொண்டது சாப்ளினின் சாமர்த்தியம். அவருடைய படங்கள் அனைத்தும், கீஸ்டோன் நிறுவனத்தின் மற்ற படங்களைப் போல அவசர கோலத்தில் அள்ளித் தெறித்தவையாக இல்லாமல், நல்ல தரத்துடன், எல்லோரும் ரசித்துப் பார்க்கும்படி, நினைவில் வைத்திருக்கும்படி அமைந்திருந்தன. கதையமைப்பில் தொடங்கி, நுண்ணிய உணர்வுகளைச் சொல்லாமல் சொல்லும் உத்தி, கேமரா கோணங்கள், எடிட்டிங் என்று ஒவ்வொரு நிலையிலும், கீஸ்டோன் நிறுவனத்தையே தலைகீழாய்ப் புரட்டிப் போட்டார் சார்லி சாப்ளின். அவரைப் போலப் புதுமையாய், கச்சிதமாய்ப் படமெடுக்க வேண்டும் என்று எல்லோரும் விரும்பும்படி அவருடைய படங்கள் சிறப்பாய் அமைந்திருந்தன. சாப்ளினின் பிற்காலப் படங்களோடு ஒப்பிடுகையில், இந்தப் படங்களெல்லாம் 'சுமார்' ரகத்தில் தான் சேரும். என்றாலும், தன்னுடைய திரைப்படத்தின் எல்லா அம்சங்களிலும் பங்கு பெற்று, தான் நினைத்தது போலவே அதை உருவாக்கும் வல்லமையை, இந்தப் படங்களில் தான் சார்லி சாப்ளின் பழகிக் கொண்டார்.



இதில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய ஒரு விஷயம், 'கீஸ்டோன்' நிறுவனத்தில் தான் சினிமாத் தொழிலைக் கற்றுக் கொண்டார் சார்லி சாப்ளின். ஆனால், சீக்கிரத்திலேயே, குரு, சிஷ்ய இடங்கள் மாறிவிட்டன. பல விஷயங்களை 'கீஸ்டோன்'க்குக் கற்றுத்தரத் தொடங்கிவிட்டார் சாப்ளின்.




1914ம் ஆண்டுத் தொடக்கத்தில் 'கீஸ்டோன்' நிறுவனத்தில் சேர்ந்த சார்லி சாப்ளின், அடுத்த ஆறு மாதங்களுக்குள், நகைச்சுவைத் திரைப்பட உலகின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வளர்ந்து விட்டார். அவருடைய படங்களைத் தேடிப் பிடித்துப் பார்க்கும் ரசிகர் கூட்டமும், பத்திரிகைகள், விமர்சகர்களின் பாராட்டுகளும் நாளுக்கு நாள் கூடிக் கொண்டிருந்தது. சாப்ளினின் படங்களைத் தொடர்ந்து வெளியிட்டுக் கொண்டிருந்த 'கீஸ்டோன்', ஒவ்வொரு படத்திலும் நல்ல லாபம் சம்பாதித்தது. ஆகவே, அவரை இன்னும் வேகமாய்ப் படங்களை எடுக்கும்படி வற்புறுத்தி, மேலும் பணம் குவித்தது அந்த நிறுவனம். ஆனால், இந்தப் படங்களையெல்லாம் சொந்தமாய்ச் சிந்தித்து, மக்கள் ரசிக்கும் வகையில் படமாக்கி, கீஸ்டோனுக்கு ஏராளமான பணவரவைத் தந்துக் கொண்டிருந்த சார்லி சாப்ளினுக்கு சம்பளம் - வாரத்துக்கு வெறும் நூற்றி எழுபத்தைந்து டாலர் !




இந்த விஷயத்தைத் தெரிந்து கொண்ட மற்ற சினிமாக் கம்பெனிகள், எப்படியாவது சாப்
ு காட்டிய அதீத கவனமும், அதனால் (அவரை அறியாமலே) வீட்டை, மனைவியை அலட்சியப் படுத்திய குணமும், 'என்னை மணக்கிற பெண், என்னையும், என் வீட்டையும் தான் முதலில் கவனிக்க வேண்டும்', என்று அவர் முரட்டுப் பிடிவாதமாய் இருந்ததும், அதனால், அவருடைய மனைவிகள், தங்களுக்கென்று ஒரு புற வாழ்க்கையை அமைத்துக் கொள்ளமுடியாதபடி, வீட்டிலேயே, அதுவும் தனிமையில் முடங்கிக் கிடக்க நேரிட்டு விடுவதும் தான், அவருடைய ஒவ்வொரு திருமணத்தின் முறிவுக்கும் முக்கியமான காரணங்களாய் இருந்திருக்கிறது. என்றாலும், அவர் நான்காவதாக ஒரு பெண்ணைக் காதலித்து மணந்தார். அவர் நெடுநாளாய்த் தேடிக் கொண்டிருந்த 'சந்தோஷமான மணவாழ்க்கை', கடைசியாய் அவருக்குக் கிடைத்து விட்டது. சாப்ளினின் நான்காவது திருமணத்தைப் பற்றி உரிய சந்தர்ப்பத்தில் விளக்கமாய்ப் பார்க்கலாம்.



இப்போது, நாம் மீண்டும் 1917ம் ஆண்டுக்குத் திரும்பியாக வேண்டும். அங்கே ஒரு மிகப் பெரிய பிரச்சனை முளைத்திருக்கிறது - சார்லி சாப்ளினையும், அவருடைய சக கலைஞர்களையும், பட முதலாளிகள் திட்டமிட்டு நசுக்கப் பார்க்கிறார்கள்.


என். சொக்கன்.


*பகிர்வு*

*┈┉┅━❀•ℙᏉᎫℙ•❀━┅┉┈​​​​​​​​​​*
ircus' என்றே பெயரிடப்பட்ட இந்தப் படம், 1928ம் ஆண்டு வெளி வந்து, பெரிய வெற்றியடைந்தது.



இந்தப் படத்தில் அவரது பல துறைப் பங்களிப்புக்காக 'சிறப்பு ஆஸ்கார் விருது' பெற்றார் சார்லி சாப்ளின். இதைத் தொடர்ந்து, சாப்ளின் தனது அடுத்த படத்தைப் பற்றி சிந்திக்கத் தொடங்கினார். அந்தப் படத்திற்கு என்ன பெயர் வைக்கலாம் ? படத்தின் கதை என்ன ? எப்படிப்பட்ட காட்சிகள், எந்தவிதமான க்ளைமாக்ஸ் என்றெல்லாம் விவாதிப்பதற்கு முன்பே, ஒரு முக்கியமான கேள்வி அவர் முன்னே நின்றது. இந்தப் படம் பேசுமா ? பேசாதா ?


சொக்கன்.


*பகிர்வு*

*┈┉┅━❀•ℙᏉᎫℙ•❀━┅┉┈​​​​​​​​​​*
ஆகவே, அவள் இறந்துவிட்ட செய்தி கேட்டதும், அந்த சோகத்தைத் தாங்க முடியாமல், துவண்டு போனான் அவன். கறுகறுவென்று இருந்த அவனுடைய தலைமுடி, சில நாள்களுக்குள் முழுவதுமாய் நரைத்து, வயதான தோற்றமாகி விட்டதாக சொல்வார்கள். (தாஜ்மஹால் கட்டியதெல்லாம் அப்புறம்தான் !)



அதே போல், இந்த விவாகரத்து வழக்கின் போது, சார்லி சாப்ளினின் தலைமுடி எல்லாம், வெள்ளைவெளேரென்று நரைத்து விட்டதாம் ! சார்லி சாப்ளின் - லிடா க்ரே தம்பதியரைப் பற்றி இன்னொரு சுவாரஸ்யமான உபதகவல் - 1952ம் ஆண்டு, புகழ்பெற்ற ரஷ்ய எழுத்தாளர் விளாடிமிர் நபகாவ் (Vladimir Nabakov), லோலிடா ('Lolita') என்ற புகழ்பெற்ற நாவலை எழுதினார். அந்த நாவலின் அடிப்படை, ஐம்பது வயது கதாநாயகன், பன்னிரண்டு வயது 'லோலிடா'வின்மீது கொள்கிற பொருந்தாக் காதல் தான். தன் வயதில் பாதியை விடக் குறைவான வயதுள்ள லிடா க்ரேமீது, சார்லி சாப்ளின் கொண்ட காதலை அடிப்படையாக வைத்துத் தான் நபகாவ் இந்த நாவலை எழுதினார் என்று சொல்லப்படுகிறது. ஆனால், இந்த விவாகரத்து வழக்கு, அது தொடர்பான வாதங்கள், விவாதங்கள், சண்டைகள் ஆகியவற்றைத் தொடர்ந்து, தன்னால் இயன்றவரை, இந்த இரண்டாம் திருமணத்தை ஒரு கெட்ட கனவாய் எண்ணி, மொத்தமாய் மறந்து விடவே முயன்றார் சார்லி சாப்ளின்.



1964ம் ஆண்டு, தனது எழுபத்தைந்தாவது வயதில் அவர் எழுதிய சுயசரிதையில், லிடா க்ரேவைப் பற்றி ஒரு வரிகூட குறிப்பிடப் படவில்லை. இந்த இரண்டாம் திருமண முறிவுக்குப் பின், எப்போதும் போல் தனது திரைப்படங்களின் மீது கவனத்தைத் திருப்பினார் சார்லி சாப்ளின்.




சொந்த வாழ்க்கையில் இத்தனை பிரச்சனைகளுக்கு இடையிலும், கவனம் சிதறாமல், தனது 'The Circus' திரைப்படத்தைச் சிறப்பாக எடுத்து வெளியிட்டது, அவருடைய திறமைக்கு ஒரு சாட்சி. அடுத்து, சாப்ளினின் இயக்கத்தில் வெளிவந்த படம், 'City Lights'. இதை வெளியிட்ட கையோடு, 1931ம் ஆண்டு, உலக நாடுகளைச் சுற்றிப் பார்ப்பதற்காக, ஒரு நீண்ட பயணம் கிளம்பினார் சார்லி சாப்ளின் - ஓய்வு எடுத்த மாதிரியும் ஆச்சு, உலகத்தைச் சுற்றி வந்ததாகவும் ஆச்சு ! இந்தப் படங்களைப் பற்றியும், சாப்ளினின் உலக சுற்றுலாவைப் பற்றியும் பின்னால் விரிவாகப் பார்க்கப் போகிறோம். ஆகவே, இப்போதைக்கு, இந்தப் பயணத்தை முடித்துக்கொண்டு திரும்பிய சார்லி சாப்ளின், அடுத்து யாரைச் சந்திக்கிறார் என்று மட்டும் கவனிக்கலாம்.





சாப்ளினின் வாழ்க்கையில் குறுக்கிட்ட அடுத்த பெண், பாலெட் காடர்ட் (Paulette Goddard - இது சினிமாவுக்காக சூட்டிக் கொண்ட பெயர். இவருடைய நிஜப் பெயர் : பாலீன் லெவி - Pauline Levy). இந்த நடிகை, ஏற்கெனவே திருமணமாகி, விவாகரத்துப் பெற்றவர். தன்னுடைய உலக சுற்றுலாவிலிருந்து திரும்பிய பின் இவரைச் சந்தித்த சார்லி சாப்ளின், இவரைத் தன்னுடைய புதிய படத்தில் ('Modern Times') கதாநாயகியாய் நடிக்கவைக்க விரும்பினார். இது விஷயமாய் இவர்கள் அடிக்கடி சந்திக்க, காதல் பிறந்தது. 'மாடர்ன் டைம்ஸ்' திரைப்படத்தோடு, இவர்களின் நேசமும் வளர்ந்தது. இந்தப் படம் வெளியான பிறகு, 1936ம் ஆண்டு ஜுன் மாதம், ஒரு கப்பல் பயணத்தின் போது நாற்பத்தேழு வயது சார்லி சாப்ளினும், இருபத்தாறு வயது பாலெட் காடர்டும் திருமணம் செய்து கொண்டார்கள். சார்லி சாப்ளினின் இந்த 'மூன்றாவது திருமணம்' நிஜமாகவே நடந்ததா, அல்லது இவர்கள் இருவரும் கதையளக்கிறார்களா என்று இன்று வரை விவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. உண்மையாகவே திருமணம் நடந்திருந்தால், அதுதொடர்பான ஆவணங்கள் எதுவும் பார்வைக்குக் கிடைக்கவில்லை. ஆகவே, இந்த சர்ச்சை தொடர்கிறது. சாப்ளினின் வாழ்க்கையில், பாலெட்டின் முக்கியமான பங்கு, அவருடைய இரண்டு மகன்களுக்கும், அவர் ஒரு நல்ல தாயாக இருந்தார். மற்றபடி, இந்த தம்பதியருக்கு வேறு குழந்தைகள் இல்லை. தன் கணவர் சார்லி சாப்ளினுடன், முதலில் (திருமணத்திற்குமுன்னால்) 'Modern Times', பிறகு, 'The Great Dictator' என்று இரண்டு அருமையான படங்களில் நாயகியாய் இணைந்து நடித்தார் பாலெட் காடர்ட். இதன் மூலம் அவருக்குப் பல புதிய படங்களில் வாய்ப்புகள் கிடைத்தன. ஆனால், ஒரு வீட்டில் இருவருமே நட்சத்திரங்களாய் இருக்கும் போது, வழக்கமாய் எழுகிற அதே பிரச்சனை தான், இந்தத் திருமணத்துக்கும் வில்லனாய் வந்தது. இருவரும் அவரவர் பணியில் கவனம் செலுத்த, அவர்களை அறியாமலே அவர்களுக்குள் ஒரு விரிசல் விழுந்து, பெரிதாகி விட்டது. இருவராலுமே அதைத் திரும்ப ஒட்டச் செய்ய முடியவில்லை.




'The Great Dictator' படம் தயாராகிக் கொண்டிருக்கும் போதே, சாப்ளினும், பாலெட்டும் மனதளவில் பிரிந்து விட்டார்கள். பின்னர், 1942ம் ஆண்டு ஜுன் மாதம், முறைப்படி விவாகரத்துப் பெற்றார்கள். ஆறு ஆண்டு மணவாழ்க்கை முடிவுக்கு வந்தது. மூன்று திருமணங்கள். ஆனால், இந்த மூன்றுமே மிக மோசமான ஏமாற்றங்களையும், தோல்வியையும் தான் சார்லி சாப்ளினுக்குப் பரிசாய்த் தந்தன. இந்தத் தோல்விகளுக்கு, சாப்ளினும் ஒரு விதத்தில் காரணம் தான். அவர் தன்னுடைய தொழிலின் மீத
t' முக்கியமான ஒரு படைப்பு. அமெரிக்காவுக்கு வருகிற ஒரு கப்பலில், சார்லி சாப்ளினும், பிறரும் அடிக்கிற லூட்டிகளோடு படம் தொடங்குகிறது. அந்தக் கப்பலில் சாப்ளின் ஒரு அழகிய பெண்ணையும், அவளுடைய அம்மாவையும் சந்திக்கிறார். அவர்களோடு நன்கு பழக்கமாவதற்குள், அமெரிக்கா குறுக்கிடுகிறது, 'அப்புறம் பார்க்கலாம்', என்று விடைபெற்றுக் கொண்டு, ஆளுக்கு ஒரு திசையில் பிரிந்து போகிறார்கள். பின்னர், அமெரிக்காவின் தெருக்களில், பிழைப்புக்கு வழி தெரியாமல் திணறும் சார்லி சாப்ளின், அவரை மீண்டும் சந்திக்கும் அந்தக் 'கப்பல்' பெண், சில பல வேடிக்கைச் சம்பங்களுக்குப் பின், அவர்களிடையே காதல், கல்யாணம் என்று படம் நகர்கிறது. ஆனால், விநாடிக்கு ஒரு கலாட்டா என்ற விகிதத்தில் நகைச் சுவையை அள்ளித் தெறித்த இந்தக் கலகலப்பான படத்தின் நடுவே, ஒரு உருக்கமான காட்சி - படத்தில் சில விநாடிகளே இடம் பெறும் அந்தக் காட்சியை, ரசிகர்கள் கொஞ்சம் கண்ணிமைத்தாலும் தவற விட்டு விடச் சாத்தியமுண்டு. ஆனால், அந்தச் சிறிய காட்சியை கவனித்துப் பார்க்கிற போது, மௌனத் திரைப்படங்களின் பலவீனங்களைக் கூட நுட்பமான கதை சொல்லும் உத்தியாகப் பயன் படுத்தும் சார்லி சாப்ளினின் ஆளுமை வெளிப் படுகிறது. கப்பலில் சாப்ளின் சந்தித்த அந்தப் பெண், இப்போது ஒரு உணவகத்தில் அமர்ந்திருக்கிறாள். முகத்தில் சோகம், ஆனால், அது ஏன் என்று தெரியவில்லை. அப்போது, அவளைப் பார்க்கும் சார்லி சாப்ளின், பழைய ஞாபகத்தில் உற்சாகமாக அவளை அழைக்கிறார். அவளும் அவருக்கு அருகே வந்து அமர்கிறாள், 'ஏன் இப்படி உன் முகம் சோகமா இருக்கு ?', என்பது போல் சைகை செய்கிறார் சாப்ளின். அவள் பதில் பேசவில்லை. கையிலிருந்த ஒரு கைக்கு ட்டையை விரித்துக் காண்பிக்கிறாள். சட்டென்று சாப்ளினின் முகத்திலும் சோகம் கவிகிறது. அவர் அவளுக்கு ஆறுதல் சொல்ல முயல்கிறார். மௌனப்படம் என்பதால், 'என்னாச்சு ?', என்ற சைகைக்கு, அவளால் விரிவாக பதில் சொல்ல முடியாது. ஆனால், அந்தக் கைக்குட்டையைப் பார்த்ததும் சாப்ளினுக்கு என்ன புரிந்தது ? முதல் காட்சியில், (கப்பலில்) சாப்ளின் அந்தப் பெண்ணைச் சந்தித்த போது, அவளோடு, அவளுடைய அம்மாவும் இருந்தார். அப்போது, அவர் தலையில் கட்டியிருந்த கைக் குட்டை தான், இப்போது அந்தப் பெண்ணின் கையில் இருக்கிறது. அதாவது, அம்மா இறந்து விட்டார், அந்தச் சோகம் தான் அவளுக்கு. நகைச்சுவைப் படம் தான். என்றாலும், அதனுள் கொஞ்சூண்டு செருகப் பட்டிருக்கும் இந்தச் சோகம், பார்வையாளர்கள் மனதில் அழுத்தமாய்ப் பதிந்து விடுகிறது. நுணுக்கமான இந்தக் காட்சியைப் போலவே, இன்னும் பல உதாரணங்களை சாப்ளினின் 'ம்யூச்சுவல்' காலப் படங்களில் பார்க்கலாம். இந்தப் படங்களின் மூலம், சார்லி சாப்ளினின் கதாபாத்திரம், நம் எல்லோரையும் போல, ஆசாபாசங்களுடன்கூடிய ஒரு சாதாரண மனிதனாக, மக்களிடையே மிகுந்த புகழ்பெற்றது. இந்த 12 படங்களுடன், 'ம்யூச்சுவல்' நிறுவனத்துடனான சார்லி சாப்ளினின் ஒப்பந்தம் முடிவுக்கு வந்தது.




இதையடுத்து, மேலும் பன்னிரண்டு படங்களுக்காக, சாப்ளினுடன் ஒரு புதிய ஒப்பந்தத்தைச் செய்து கொள்ள முன்வந்தது 'ம்யூச்சுவல்'. இதற்காக, அவருக்கு ஒரு மில்லியன் டாலர் சம்பளம் தருவதற்கு முன் வந்தார்கள். ஒரு மில்லியன் என்பது, பத்து லட்சம் டாலர் - இப்போதைய மதிப்பில், கிட்டத்தட்ட ஐந்து கோடி ரூபாய் ! அப்படியானால், அந்தக் காலத்தில் அதற்கு எத்தனை மதிப்பு இருந்திருக்கும் என்று கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். அது வரை திரைப்பட சரித்திரத்தில் வேறு எந்த நடிகரும், இப்படியொரு பெருந் தொகையைச் சம்பளமாய் வாங்கியதில்லை ! ஆனாலும், 'ம்யூச்சுவல்' நிறுவனத்தின் இந்தக் கோரிக்கையை சாப்ளின் ஏற்கவில்லை. ஏன் ? ஒரு மில்லியன் டாலர் சம்பளம் என்றால், கசக்கிறதா ? இந்த 'மில்லியன் டாலர் கேள்வி'க்கான பதிலை அறிய வேண்டுமானால், அப்போதைய சார்லி சாப்ளினின் மனோ நிலையை நாம் புரிந்து கொள்ளவேண்டும் . அவருக்கு 'ம்யூச்சுவல்' நிறுவனத்தை ரொம்பப் பிடித்திருந்தது, 'கீஸ்டோன்'போல, இவர்கள் அவரை அவசரப் படுத்தவில்லை. 'எஸ்னே'போல, பழைய படங்களை ஒட்டுப் போட்டு அல்பத்தனம் செய்யவில்லை. என்றாலும், அவர்களோடு தொடர்ந்து பணிபுரிய வேண்டும் என்று சார்லி சாப்ளினுக்கு விருப்பமில்லை.



ஏன் ? 1914ம் ஆண்டு, திரைப் படங்களில் நடிக்கத் தொடங்கியதிலிருந்து, ஒவ்வொரு வருடமும், வெவ்வேறு நிறுவனங்களுக்குத் தாவிக் கொண்டேயிருந்தார் சார்லி சாப்ளின். ஒவ்வொரு தாவலின் போதும், அவருடைய சம்பளம் பலமடங்காய் உயர்ந்தது. என்றாலும், பணத்துக்காக மட்டும்தான் அவர் அப்படிச் செய்தார் என்று சொல்லி விடமுடியாது. அதையும் தாண்டி, வேறொரு விருப்பம் அவரைச் செலுத்திக் கொண்டிருந்தது. சாப்ளின் போன்ற அற்புதமான கலைஞர்கள், தன்னிச்சையாய் இயங்க விரும்புகிறவர்கள். வேறொரு பட நிறுவனமோ, நடிகர்களோ, அரசாங்கமோ, அல்லது வேறு அம்சங்களோ தங்களைக் கட்டுப்படுத்துவதை, அவர்கள் கொஞ்சமும் விரும்ப மாட்டார்கள். ஆகவேதான், சினிமாவில் எத்தனை சம்பாதித்
தைப் பார்த்தால் தான், சாப்ளினின் புத்திசாலித்தனம் புரியும். அதுவரை நகைச்சுவையாய் விளையாடிக் கொண்டிருந்த கோமாளிக் கதாநாயகன், படத்தின் இறுதிப் பகுதியில், தாங்க முடியாத சோகத்தில் தனக்குள் சுருள்கிற போது, ரசிகர்கள் அவனுடைய ஏமாற்றத்தைப் பகிர்ந்து கொண்டு, அவனுக்காக அழுதார்கள். ஆனால், அடுத்த காட்சியில், அவன் தன்னுடைய ஏமாற்றத்தைத் துடைத்துக் கொண்டு, 'வாழ்க்கை அப்படிதான்' என்னும் விதமாய்த் தோள்களைக் குலுக்கியபடி, ஒரு நீண்ட சாலையில், தன்னந்தனியே நடந்து செல்கிறான்.


இப்படியொரு கவித்துவமான இறுதிக் காட்சி, இந்தப் படத்தின் தரத்தைப் பல மடங்கு உயர்த்தி விடுகிறது ! இந்தக் கால கட்டத்தில் வெளி வந்த சாப்ளினின் எல்லாப் படங்களிலும், இதுபோன்ற சிறப்பான பல காட்சிகளைப் பார்க்கலாம். இந்தப் படங்களின் மூலம், 'காமெடியன்' என்ற நிலையிலிருந்து உயர்ந்து, ஒரு நல்ல இயக்குனராகத் தன்னை நிலை நிறுத்திக்கொள்ள முயன்றார் சாப்ளின்.


'எஸ்னே'வில் சார்லி சாப்ளினுக்குக் கிடைத்த ஒரு பெரிய அதிர்ஷ்டம் - அந்த நிறுவனத்தின் விளம்பர உத்திகள் மிகச் சிறப்பாய் இருந்தன. சாப்ளினின் படங்களை அமெரிக்காவின் மூலை, முடுக்குகளுக்கெல்லாம் எடுத்துச் சென்று, அவருடைய திறமைகளைக் கச்சிதமாய்ச் சந்தைப் படுத்தி, மிக நல்ல முறையில் வியாபாரம் செய்தார்கள். இதனால், சார்லி சாப்ளினுக்குப் பெரிய நட்சத்திர அந்தஸ்து கிடைத்தது. அவருடைய திரைப்படங்கள், முன்பு எப்போதும் கண்டிராத அளவுக்கு வசூலைக் குவித்தன. இதுதவிர, சாப்ளினின் புகழ் பெற்ற 'ட்ராம்ப்' உருவத்தை, மேலும் அதிக உயரங்களுக்கு எடுத்துச் சென்றது 'எஸ்னே' நிறுவனம். அந்த வடிவத்திலான பொம்மைகள், புத்தகங்கள், புகைப் படங்கள், வாழ்த்து அட்டைகள் ஆகியவற்றை ஏராளமாய்த் தயாரித்து விற்பனை செய்து, அமெரிக்கக் குழந்தைகள் மனதில் சாப்ளினின் உருவத்தை அழுத்தமாய்ப் பதிய வைத்தார்கள்.



பிறகென்ன ? சாப்ளினின் புதுப் படங்கள் வெளியாகும் போதெல்லாம், 'இந்தப் படத்துக்குக் கூட்டிப் போனால் தான் ஆச்சு', என்று குழந்தைகள் அழுது, அடம் பிடிக்கலானார்கள். எந்தப் பத்திரிகையைத் திறந்தாலும் சாப்ளினின் புகைப் படங்களைப் பார்த்துப் பழகியிருந்த பெரியவர்களும், அதே அளவு ஆவலோடு சாப்ளினின் படங்களைப் பார்க்கக் குவிந்தார்கள். 'எஸ்னே'வுக்காக, சார்லி சாப்ளின் எழுதி, இயக்கிய திரைப்படங்கள் பதினான்கு. இவற்றில் சில படங்கள், 'கீஸ்டோன்' காலத்தில் அவர் எடுத்த திரைப்படங்களின், மெருகூட்டப்பட்ட புது வடிவங்கள். மற்றவை அனைத்தும், சாப்ளினின் குறிப்பிடத்தக்க படங்களின் பட்டியலில் இடம் பெறக்கூடியவை. ஏனெனில், ஒரு தரமான இயக்குனராக சாப்ளினின் வளர்ச்சியை, இந்தப் படங்களில் தெளிவாகப் பார்க்கலாம்.


அந்த ஆண்டு இறுதியில், சார்லி சாப்ளினின் அண்ணன் சிட்னி சாப்ளின், அவரோடு மேலாளராக இணைந்து கொண்டார். இப்போது சிட்னிக்குத் தம்பியின் திறமையில் நல்ல நம்பிக்கை வந்திருந்தது.




'அண்ணன் உடையான், படைக்கு அஞ்சான்', என்று யாரும் புதுமொழி சொல்லவில்லை. ஆனாலும், சார்லி சாப்ளினின் வாழ்க்கையில் ஒரு பெரிய மாற்றம். அண்ணன் சிட்னி சாப்ளினால் தான் வந்தது. சாதாரண மாற்றமில்லை. பணம் கொத்துக் கொத்தாய்க் கொட்டும் வசந்த மாற்றம் ! அந்தக் காலத்தில், சார்லி சாப்ளினின் படங்கள் எல்லாமே, மிக நன்றாய் ஓடி, தவறாமல் வெற்றியடைந்து கொண்டிருந்தன. அவருடைய படங்கள் ஒவ்வொன்றும், தயாரிப்புச் செலவைப் போல் பல மடங்கு லாபம் சம்பாதித்தன. என்றாலும், இந்த லாபத்தின் பெரும் பகுதி, சாப்ளினுக்கும் கிடைக்கவில்லை, அவருடைய தயாரிப்பாளருக்கும் கிடைக்கவில்லை ! சாப்ளின் படங்களை வாங்கி, விநியோகிப்பவர்களும், திரையரங்க உரிமையாளர்களும்தான் நன்றாக அனுபவித்துக் கொண்டிருந்தார்கள். இதை உற்று கவனித்த சிட்னி, சார்லி சாப்ளின் படங்களுக்கான விநியோகக் கட்டண முறையை மாற்றியமைக்க வேண்டும் என்று புரிந்து கொண்டார். இந்த அடிப்படையில், 'எஸ்னே' நிறுவனத்துக்கு சில நல்ல ஆலோசனைகளைச் சொன்னார் அவர்.


அதன் படி செயல்பட்ட 'எஸ்னே'வுக்கு, உடனடி பலன் - சார்லி சாப்ளினின் ஒவ்வொரு படத்திலும், அவர்களுக்குக் கிட்டத்தட்ட ஒரு லட்சம் டாலர் வரை லாபம் கிடைத்தது ! தயாரிப்பாளருக்கு மட்டும் பணம் கிடைத்தால் போதுமா ? கடினமாய் உழைத்துப் படமெடுக்கிற சாப்ளினுக்கும் இந்த லாபத்தில் ஒரு பங்கு சேர்வது தானே நியாயம் ? - இப்படி வாதிட்ட சிட்னி சாப்ளின், 'எஸ்னே'வுடனான சார்லியின் ஒப்பந்தத்தைத் திருத்தி எழுதினார். அதன்படி, சார்லி சாப்ளினின் ஒவ்வொரு படத்திற்கும், அவருக்குப் பத்தாயிரம் டாலர் போனஸ் தொகையாக வழங்கப்பட்டது ! பத்தாயிரம் அமெரிக்க டாலரின் இப்போதைய மதிப்பு, கிட்டத்தட்ட ஐந்து லட்சம் ரூபாய் - அப்படியானால், 90 ஆண்டுகளுக்கு முன்னால், அந்தக் காலத்தில், பத்தாயிரம் டாலர் என்பது எத்தனை மதிப்பு மிக்கதாய் இருந்திருக்கும் என்று ஊகித்துக் கொள்ளலாம்.



இளம் வயதில், சாப்பாட்டுக்குக் கூட வழியில்லாமல் தவித்த சார்லி சாப்ளின், இப்போது அமெரிக்காவின் ப
த போதும், சார்லி சாப்ளினின் மனதுக்கு முழு நிம்மதி கிடைக்க வில்லை. 'ம்யூச்சுவல்'போல, அவருக்குத் தேவையான எல்லா வசதிகளையும், ஒத்துழைப்பையும் வழங்கிய நிறுவனத்தைக்கூட, அவரால் முழுமையாய் ஏற்க முடியவில்லை. தனக்கான சுதந்திரம் இன்னும் கிடைக்கவில்லை என்று தான் அவருக்குத் தோன்றிக் கொண்டேயிருந்தது. இன்னும் தெளிவாய்ச் சொல்வதானால், 'இத்தனை வருடத்தில், இத்தனை படங்கள், அதற்கு இத்தனை காசு' என்றெல்லாம் கணக்குப் போட்டு வேலை செய்வது சார்லி சாப்ளினுக்குப் பிடிக்கவில்லை. தவிர, ஒரு ரீல், இரண்டு ரீல் அளவில் சிறு படங்கள் மட்டும் எடுத்தால் போதாது. மேலும் அதிக நேரம் செலவழித்து, முழு நீளத் திரைப்படங்கள் எடுக்க வேண்டும் என்று விரும்பினார் அவர்.



இந்தச் சிந்தனைகளின் அடிப்படையில் தான், 'ம்யூச்சுவல்' நிறுவனத்துடன் இன்னொரு ஒப்பந்தத்தில் சார்லி சாப்ளின் கையெழுத்திட விரும்பவில்லை. 'இனிமேல், நானே படம் தயாரிக்கப் போகிறேன்', என்று அறிவித்தார். 'என்னுடைய படங்களை வாங்கி, விநியோகிப்பதற்கான நிறுவனங்கள் இருந்தால், வாருங்கள் !' சார்லி சாப்ளினின் இந்த அறிவிப்புக்கு, அபாரமான வரவேற்பு.


பெரும் புள்ளிப் பட நிறுவனங்கள் எல்லோரும், அவரை மொய்த்துக் கொண்டார்கள். 'ஒரு மில்லியன் டாலர்', 'ஒன்றே கால் மில்லியன் டாலர்' என்று பேரங்கள் தொடங்கின. கடைசியில், சார்லி சாப்ளினின் படங்களை வாங்கி, விநியோகிக்கும் உரிமை, 'ஃபர்ஸ்ட் நேஷனல்' ('First National') என்ற புதிய நிறுவனத்துக்குக் கிடைத்தது. ஒப்பந்தத் தொகை, ஒரு மில்லியன் டாலருக்கும் மேலே ! இதன்படி, உலக சினிமாவின் முதல் 'மில்லியன் டாலர் ஒப்பந்தம்', சார்லி சாப்ளினுடையது தான். அந்தக் கால கட்டத்தில் அவர் அளவுக்கு உலகப் புகழ் பெற்ற நடிகர்கள், இயக்குனர்களும் இல்லை, அவர் அளவுக்குச் சம்பளம் வாங்கியவர்களும் இல்லை ! (ஆனால், இந்தத் தொகையின் பெரும் பகுதி சார்லி சாப்ளினின் கைக்குக் கிடைத்திருக்க வாய்ப்பில்லை என்பது தான் வேடிக்கையான விஷயம்.


அரசாங்கத்துக்கு வரி செலுத்தியது, தன்னுடைய படங்களின் படப்பிடிப்புக்காக செலவழித்தது போக, மிச்சமுள்ள தொகை தான் அவருடைய 'உண்மை'யான சம்பளமாகக் கிடைத்தது !) என்றாலும், இப்போது, சார்லி சாப்ளின் ஆசைப் பட்டபடி, மிக சுதந்திரமாய் அவர் தனது படங்களைத் தயாரிக்க முடிந்தது.



ஆனால், இப்படிக் கட்டவிழ்ந்த ஆனந்தத்தால், தன்னுடைய படங்களின் தரம் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்ற கவனத்துடன், முன்பை விட அதிக முனைப்புடன் தனது படங்களைத் திட்டமிட்டார் சாப்ளின்.



ஆனால், இந்தப் புதிய நிறுவனத்துக்காக, தனியே படப்பிடிப்புத் தளம் ஏதும் இல்லை. ஆகவே, லாஸ் ஏஞ்சலஸ் / ஹாலிவுட் நகரிலேயே, தனக்கென்று, எல்லா வசதிகளுடன் ஒரு புதிய ஸ்டூடியோவைக் கட்டிக் கொண்டார் சார்லி சாப்ளின். அப்போதிலிருந்து, அவருடைய படங்கள் அனைத்தும், இந்த ஸ்டூடியோவில் தான் படமாக்கப்பட்டன. 'First National' நிறுவனத்துடன் இணைந்த பிறகு, சார்லி சாப்ளினின் முதல் படம், 'A Dog's Life' தெரு நாய் ஒன்றின் வாழ்க்கையை, நாடோடி சாப்ளினின் வாழ்க்கையோடு கோர்த்துச் சொல்லும் இந்தத் திரைப்படம், அருமையான நகைச்சுவைக் கொத்துகளோடு, பல உணர்ச்சிமயமான காட்சிகளைக் கொண்டது. 'கஷ்டப்படுகிறவர்களின் சிரமங்களை, இன்னொரு ஏழையால் தான் புரிந்து கொள்ள முடியும்', என்ற கருத்தை வலியுறுத்தி, வறுமையில் வாடும் அன்றாடங்காய்ச்சி மக்களின் துயரங்களை, திரையில் மிகச் சிறப்பாய் வெளிப் படுத்தியிருந்தார் சார்லி சாப்ளின்.




'கலைப் படங்கள்' (Art Films) என்று இப்போது வெகுவாய் சிலாகிக்கப்படும் யதார்த்தத் திரைப்படங்களின் முன்னோடியாக, சாப்ளினின் 'A Dog's Life' படத்தைச் சொல்பவர்கள் உண்டு. இந்தப் படத்தில் சார்லி சாப்ளினுடன் இணைந்து நடித்த நாயின் பெயர் 'Mutt'. இந்தப் படம் முடிவதற்குள், சாப்ளினுடன் நன்றாகப் பழகிவிட்ட இந்த நாய், படம் முடிந்து, அவர் ஒரு சுற்றுலா கிளம்பியதும், அவரைப் பிரிந்த துயரம் தாங்காமல், சாப்பிட மறுத்து, இறந்தே போய் விட்டது ! சார்லி சாப்ளினுக்காகவும், அவர் முயன்று, நடிக்க வைத்த அந்த நாய்க்குட்டிக்காகவும், 'A Dog's Life' படம் நன்றாகவே ஓடியது. என்றாலும், சீக்கிரத்திலேயே சாப்ளினின் பிரச்சனைகள் தொடங்கி விட்டன.



புதிதாய் ஒன்றுமில்லை. எப்போதும் போல், பணப் பிரச்சனை தான் ! 'சாப்ளின் தன்னுடைய படங்களுக்கு ரொம்ப செலவழிக்கிறார்', என்பதாக 'ஃபர்ஸ்ட் நேஷனல்' நிறுவனத்தினர் குற்றச்சாட்டு எழுப்பினார்கள். இதைக் கேட்கும் போது, வேடிக்கையாய் இருக்கிறது - சார்லி சாப்ளினின் படம், அவரே தான் இயக்குனர், படத்தைத் தயாரிப்பதும் அவர் தான். ஆனால், அதனால் பாதிக்கப் படுவது, இந்த விநியோக நிறுவனம் ! ஏனெனில், ஒப்பந்தத்தின் படி, ஒரு படத்தை எடுப்பதற்கு எத்தனை செலவானாலும், அது சார்லி சாப்ளினின் பொறுப்பு தான். ஆனால், அந்தப் படம் முடிவடைந்ததும், அதற்குச் செலவழிக்கப்பட்ட தொகையைக் கொடுத்து, 'ஃபர்ஸ்ட் நேஷனல்' நிறுவனம் வாங்கிக் கொள்ள வேண்டும். அதன்
ெல்லாம், அந்தக் குற்றவுணர்ச்சி அவரை வருத்தியது. (இந்த இழப்பின் பாதிப்பில், இந்தச் சந்தர்ப்பத்தில் தான் அனுபவித்த துயரங்கள், அனுபவங்களையெல்லாம் பின்னணியாய்க் கொண்டு, 'The Kid' என்ற பெயரில் ஒரு அருமையான திரைப்படமாய் உருவாக்கினார் சார்லி சாப்ளின்.) அதன் பின், சாப்ளினுக்கும், அவருடைய மனைவிக்கும் இடையிலான விரிசல் மேலும் அதிகமானது.



1920ம் ஆண்டு, முறைப்படி விவாகரத்துப் பெற்று அவர்கள் பிரிந்தார்கள். 1923ம் ஆண்டு, ஏட்னா பர்வியான்ஸுக்கு பதிலாக, தன்னோடு நடிப்பதற்கு இன்னொரு கதாநாயகியைத் தேடிக் கொண்டிருந்தார் சார்லி சாப்ளின். அப்போது, லோலிடா மெக்கர்ரி (Lolitta McCurry) என்ற நடிகை அவருக்கு அறிமுகமானாள். ஏற்கெனவே, சார்லி சாப்ளின் நடித்து, இயக்கிய 'Idle Class', 'The Kid' ஆகிய படங்களில், சிறிய வேடங்களில் நடித்திருந்த லோலிடா, இப்போது மீண்டும் அவரிடம் வாய்ப்புக் கேட்பதற்காக வந்திருந்தாள். வந்த இடத்தில் பெரிய அதிர்ஷ்டம் - சாப்ளினின் புதிய படத்தில் ('Gold Rush') கதாநாயகியாகவே ஒப்பந்தமானாள் அவள். லோலிடாவுக்கு லிடா க்ரே (Lita Gray) என்று புதிய பெயர் சூட்டி, அவளைத் தனது புதிய கதாநாயகியாக அறிமுகம் செய்தார் சார்லி சாப்ளின். ஆனால், அந்தப் படம் தொடங்கி, சிறிது தூரம் நகர்வதற்குள், நாயக - நாயகியான சார்லி சாப்ளின் - லிடா க்ரே இடையே, நிஜமான காதல் மலர்ந்து விட்டது. முதல் திருமணத்தைப் போலவே, சாப்ளினின் இரண்டாவது திருமணமும் அவசரகதியில் ஏற்பாடு செய்யப்பட்டு, திடுதிப்பென்று நடந்து முடிந்து விட்டது - 1924ம் ஆண்டு, நவம்பர் 26ம் தேதி சாப்ளினும், லிடா க்ரேவும் மெக்ஸிகோவில் மணந்தார்கள். (அப்போது, சாப்ளினுக்கு வயது 35, அவருடைய மனைவிக்கு 16 !) சார்லி சாப்ளினின் 'புதிய' திருமண வாழ்க்கை, சந்தோஷமாகவே தொடங்கியது. ஆனால், அவர் மனைவி லிடா க்ரே அவரோடு தொடர்ந்து நடிக்க முடியவில்லை, அவர் கருவுற்றிருந்த காரணத்தால், அவருக்கு பதிலாக, அந்தக் கதாபாத்திரத்தில் ஜியார்ஜியா ஹேல் (Georgia Hale) என்ற இன்னொரு நடிகையை நடிக்கச் செய்தார் சார்லி சாப்ளின்.


சாப்ளினுக்கும், லிடாவுக்கும் வயது வித்தியாசம் ரொம்ப அதிகம். என்றாலும், தன் மனைவியை ரொம்பவும் நேசித்தார் சாப்ளின். ஆகவே தான், சில பிரச்சனைகள் தலைகாட்டிய போதும், தன்னால் முடிந்த வரை விட்டுக் கொடுத்து, விஷயம் பெரிதாகாமல் பார்த்துக் கொண்டார். சந்தோஷமாய் இல்லறம் நடத்திய இந்த தம்பதியருக்கு, அடுத்தடுத்து இரண்டு ஆண் குழந்தைகள் பிறந்தன. 1925ம் ஆண்டு மே மாதம் பிறந்த முதல் மகனுக்கு, 'சார்லஸ் சாப்ளின்' என்று தன்னுடைய பெயரையும், அடுத்த ஆண்டு மார்ச் மாதம் பிறந்த இரண்டாவது மகனுக்கு, 'சிட்னி சாப்ளின்' என்று தன் அண்ணனின் பெயரையும் வைத்தார் சார்லி சாப்ளின். வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு, சார்லி சாப்ளினின் இந்தத் திருமணம் ஒழுங்கான பாதையில் சென்று கொண்டிருப்பது போல்தான் தோன்றியது. ஆனால், உண்மையில் சாப்ளினுக்கும், லிடா க்ரே மற்றும் அவரது குடும்பத்தாருக்கும் ஏகப்பட்ட பிரச்சனைகள் இருந்தன. இந்த விவகாரங்கள் எல்லாம் ஒன்றாய்ச் சேர்ந்து, 1926ம் ஆண்டு இறுதியில் பெரிதாய் வெடித்தது. இந்த நூற்றாண்டின் முற்பகுதியில், உலகம் முழுவதும் ஆச்சரியத்தோடு திரும்பிப் பார்த்த ஒரு வழக்கு, சார்லி சாப்ளின் - லிடா க்ரே விவாகரத்து வழக்கு தான்.




நீதிமன்றத்தில் இந்த வழக்கின் விசாரணை தொடங்கிய பிறகு, ஒவ்வொருவராய்த் தங்களின் தரப்பு நியாயங்களை விவரிக்க, காதல், காமம், பேராசை, வன்மம், வேதனை, துயரம் என்று உணர்ச்சிமயமான பல தகவல்கள் அடுத்தடுத்து வெளியாகிக் கொண்டிருந்தன. (சில வியாபாரிகள், இந்த வழக்கு பற்றிய விபரங்களைத் தொகுத்து, மலிவு விலை நாவல்கள் போல் அச்சடித்து விற்றார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன் !) சார்லி சாப்ளினின் தரப்பு, 'லிடா க்ரேயின் அம்மா தான் எல்லாப் பிரச்சனைகளுக்கும் காரணம்' என்று குற்றம் சாட்டியது. பணத்தாசையால், அவர் தான் இப்படித் திட்டம் தீட்டி, தன் மகளைத் தூண்டி விட்டு, சாப்ளினிடம் இருக்கும் எல்லாச் சொத்துகளையும் அபகரித்துவிட முயல்கிறார் என்று சொல்லப்பட்டது. இதை நிஜம் என்று நிரூபிப்பது போல், லிடா க்ரேயின் தரப்பில், ஒரு பெரிய தொகை ஜீவனாம்சமாய்க் கேட்கப்பட்டது. உண்மையில், சாப்ளினின் அப்போதைய சொத்து மதிப்பைவிட, இந்தத் தொகை அதிகமானது ! இரண்டு கட்சியினரும், ஒருவர் மீது மற்றவர் சேற்றை வாரி இறைக்க, ஏகப்பட்ட கலாட்டா, சண்டை, பரபரப்பு, பணச்செலவு. கடைசியில் சுமுகமாய் விவாகரத்து கிடைத்து விட்டது. என்றாலும், இந்த அலைக்கழிப்புகளும், வலுக்கட்டாயமான பிரிவும், மனரீதியாக சாப்ளினை ரொம்பவே பாதித்து விட்டது. ஏனெனில், இத்தனை பிரச்சனைகளுக்குப்பிறகும், அவர் தன் மனைவி லிடா க்ரேவை நேசித்தார். (எப்படியாவது இந்த விவாகரத்தைத் தவிர்த்து விட முடியாதா என்று, அவர் தன்னால் இயன்ற வரை சமாதானத்துக்கு முயன்றதாய்ச் சொல்கிறார்கள்.)



மொகலாய மன்னன் ஷாஜஹான், தன் மனைவி மும்தாஜை ஆழமாய் நேசித்தான்.
ளின் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்ட சார்லி சாப்ளின், இந்த விநோதக் கணக்கு வழக்குகளில் சிக்கிக் கொள்ளாமல் தப்பி விட்டார். 'நீங்கள் போடும் கணக்குகளெல்லாம் எனக்குப் புரியாது. என்னைப் பொறுத்த வரை, இந்தப் படத்தை எடுத்து முடிக்க, இவ்வளவு செலவாகியிருக்கிறது, அதைக் கொடுத்தால் தான் உங்களுக்கு இந்தப் படம் கிடைக்கும்', என்று வெட்டு ஒன்று, துண்டு ரெண்டாகப் பேசிவிட்டார் சாப்ளின். அவருடைய விநியோக நிறுவனத்துக்கு, சாப்ளினை விட்டு விடவும் விருப்பமில்லை. ஆனால் அதே சமயம், அவர் எடுத்திருக்கிற படத்துக்கு இவ்வளவு பணம் கொடுப்பதற்கும் மனசில்லை. ஆகவே, வேறு குறுக்கு வழிகளில் அவரைச் சமாளிக்கமுடியுமா என்று பார்த்தார்கள். இந்தத் தில்லுமுல்லுகளைத் தெரிந்து கொண்ட சார்லி சாப்ளின், யாருக்கும் தெரியாமல் 'The Kid' படத்திற்காக இதுவரை படமாக்கியிருந்த சுருள்களையெல்லாம் எடுத்துச்சென்று, ரகசியமாய் ப்ரின்ட் போட்டு, எடிட் செய்து, வெளியிடத் தயார் நிலைக்குக் கொண்டு வந்தார். அதன் பிறகு, 'ஃபர்ஸ்ட் நேஷனல்' நிறுவனத்துக்கு வேறு வழி இருக்கவில்லை. சார்லி சாப்ளின் கேட்ட தொகையைக் கொடுத்து, 'The Kid' படத்தை வாங்கி, வெளியிட்டார்கள். அந்தப் படம் உலகமெங்கும் சிறப்பாக ஓடி, பல மடங்கு லாபம் சம்பாதித்தது.



முதல் உலகப்போரின் கொடுமைகளிலிருந்து, உலகம் மெல்ல மெல்ல மீண்டு கொண்டிருந்த சூழல் அது. அந்தப் போரால் அநாதைகளாக்கப்பட்டிருந்த ஏராளமான குழந்தைகளின் எதிர்காலத்தைப் பிரதிபலிப்பது போல் சாப்ளினின் இந்தப் படம் அமைந்திருந்த காரணத்தால், மக்கள் அந்தப் படத்தை உணர்ச்சிபூர்வமாய் உள்வாங்கிக் கொண்டு, மிகவும் விரும்பி ரசித்தார்கள். இயக்குனராகவும், நடிகராகவும் சார்லி சாப்ளினுக்கு மிக நல்ல பெயர் கிடைத்தது. ஆனால், நாம் ஏற்கெனவே பார்த்தது போல், இந்தப் படத்தின் தயாரிப்பின்போதும், அதற்குப் பிறகும், 'ஃபர்ஸ்ட் நேஷனல்' நிறுவனத்துடன் சார்லி சாப்ளினுக்கு ஏகப்பட்ட மனக் கசப்புகள். ஆகவே, அந்த வெறுப்பில், மிச்சமிருக்கிற படங்களை சடசடவென்று சுட்டுத் தந்து விட்டு, இவர்களுக்கு ஒரு கும்பிடு போட்டு விட்டு வெளியேறிவிடலாம் என்று அவர் திட்டமிட்டார்.



'The Kid' படத்துக்குப் பின் வெளிவந்த சாப்ளினின் குறும்படம், 'The Idleclass'. இந்தப் படத்தைத் தொடர்ந்து, ஐரோப்பாவுக்குப் பயணமானார் சார்லி சாப்ளின். பல வருட இடைவெளிக்குப் பின், அவர் லண்டன் திரும்பிய போது, உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது. ஒரு சாதாரண நாடக நடிகனாக அங்கிருந்து கிளம்பிய சார்லி சாப்ளின், இப்போது வெற்றிகரமான உலக நாயகனாய்த் திரும்புகிறார் என்பதால், இங்கிலாந்து மக்கள் அவரைப் புதிய பாசத்தோடு வரவேற்றார்கள். லண்டனில் தான் முன்பு உலவிய இடங்களையெல்லாம் சுற்றிப் பார்த்து, பழைய நினைவுகளில் மூழ்கித் திளைக்க விரும்பினார் சார்லி சாப்ளின். ஆனால், இப்போது அவரால் எங்கும் தனியே செல்ல முடியவில்லை. எல்லா இடங்களிலும் ரசிகர்கள் கூட்டம், நெரிசல். மக்கள் அவரைப் பார்ப்பதற்காக ஆவலோடு முட்டி மோதினார்கள். இந்த சமயத்தில் தான், சார்லி சாப்ளினும், அவருடைய அண்ணன் சிட்னி சாப்ளினும், அம்மா ஹென்னா சாப்ளினைத் தங்களோடு அழைத்து வருவதாக முடிவு செய்தார்கள். ஹென்னா இன்னும் முழுமையாய் குணமாகியிருக்கவில்லை. ஆனால், ஏதோ ஒரு மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெறுவதை விட, தனி வீட்டில், இன்னும் விசேஷ கவனத்துடன் அவருக்கு சிகிச்சை அளிக்கலாம் என்று அவர்கள் விரும்பினார்கள். அதன்படி, ஹென்னா சாப்ளின் அமெரிக்காவுக்கு அழைத்து வரப்பட்டார். இதனால் அவருடைய மனநிலையில் பெரிய முன்னேற்றங்கள் எதுவும் தென்படவில்லை. என்றாலும், சார்லி சாப்ளின் பிறந்த பிறகு, வறுமைத் துயரங்களை மட்டுமே அனுபவித்துக் கொண்டிருந்த ஹென்னா, தன் வாழ்க்கையின் கடைசிப் பகுதியிலாவது, நல்ல வசதிகளுடன் வாழ முடிந்தது.



இதனிடையே, 1919ல் உருவான 'யுனைடட் ஆர்ட்டிஸ்ட்' நிறுவனம், சார்லி சாப்ளின் இல்லாமல் ரொம்ப கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தது. ஆகவே, தனது சுற்றுப் பயணங்களை முடித்துக் கொண்டு ஹாலிவுட் திரும்பிய சார்லி சாப்ளின், 'ஃபர்ஸ்ட் நேஷனல்' நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை சீக்கிரமாய் முடித்து விட்டு, தனது சொந்த நிறுவனமான 'யுஏ'வின் பணிகளில் இறங்க விரும்பினார். விறுவிறுவென்று மூன்று படங்கள் உருவாயின. அநேகமாய், சார்லி சாப்ளின் தனது படங்களை அவசரமாய்ச் சுட்டுத்தள்ளிய கடைசி சந்தர்ப்பம் அது. அதன் பின் அவர் இயக்கிய, தயாரித்த ஒவ்வொரு படமும், இரண்டு முதல், பத்து ஆண்டுகள் வரை எடுத்துக் கொண்டது ! ஒரு வழியாக, 'ஃபர்ஸ்ட் நேஷனல்' நிறுவனத்துடனான சார்லி சாப்ளினின் ஒப்பந்தம் முடிவுக்கு வந்தது. அப்போதாவது அவரை நிம்மதியாக வெளியேற விட்டார்களா ? அது தான் இல்லை. இனிமேல் சார்லி சாப்ளின், 'யுனைடட் ஆர்ட்டிஸ்ட்'க்காகதான் தனது படங்களைத் தயாரிப்பார் என்பது உறுதியாகி விட்டதால், அவரைப் பற்றிப் பல விதமான குற்றச்சாட்டுகளை எழுப்பி, சாப்ளினின் பெயரைக் கெடுக்க முயன்றார்கள். சார்லி சாப்ளினும் தன் தரப்ப
ுவர் மிஞ்சும் விதத்தில் போட்டி போட்டுக் கொண்டு நடித்த நகைச்சுவைக் காட்சிகள் ஏராளம். பிரபலமான நடிகராகவும், இயக்குனராகவும் புகழ்பெற்ற சார்லி சாப்ளின், அமெரிக்கத் திரை வரலாற்றில் வேறு எந்தக் கலைஞரும் சம்பாதிக்காத அளவுக்கு பணத்தையும், புகழையும் சேர்த்தார். ஆனால், இந்தச் செல்வங்கள் அனைத்தும் தராத ஒரு நிம்மதியையும், முழுமையுணர்வையும், ஏட்னாவின் நட்பு அவருக்குக் கொடுத்தது. 'இந்த உலகத்திலேயே மிகவும் சந்தோஷமான மனிதன் நான் தான். என்னை இப்படிச் செய்தவள் நீதான்', என்று ஏட்னாவைப் பற்றி ஒருமுறை எழுதியிருக்கிறார் சார்லி சாப்ளின்.





இதுபோன்ற குறிப்புகளை வைத்துக் கொண்டு, சாப்ளினும், ஏட்னாவும் காதலிக்கிறார்கள் என்று பலரும் நம்பினார்கள். அவர்கள் ஊகித்தது உண்மையோ, பொய்யோ, கடைசி வரை அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளவில்லை. ஆனால், நல்ல நண்பர்களாகத் தொடர்ந்தார்கள்.



பின்னர், சாப்ளின் வேறொரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்ட போது, ஏட்னாவால் அந்த அதிர்ச்சியைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை என்றும், அதனால் மனமுடைந்து, அவர் குடிப் பழக்கத்தில் விழுந்து விட்டார் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன. இதைப் பற்றிக் கேள்விப்பட்ட சார்லி சாப்ளின், ஏட்னாவை அழைத்து, 'அதிகமாய்க் குடிக்காதே, உன்னை மாதிரி நடிகைக்கு அது நல்லதில்லை !', என்று அறிவுரை சொன்னார். ஆனால், அவர் சொன்னதை ஏட்னா காதில் போட்டுக் கொள்ளவில்லை. எல்லா நினைவுகளையும் குடித்தே அழித்து விடவேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டவரைப் போல், ஏராளமாய்க் குடித்து, உடம்பைக் கெடுத்துக் கொண்டார். ஒரு காலத்தில் 'ஒல்லிக்குச்சி உடம்புக்காரி'யாக இருந்த ஏட்னா, இப்போது 'குண்டு கத்திரிக்காய்' அளவுக்குப் பெருத்திருந்தார். ஆகவே, அவரைத் தனது படங்களில் தொடர்ந்து நடிக்க வைக்க முடியாத நிலைமை சாப்ளினுக்கு. 'ஃபர்ஸ்ட் நேஷனல்' நிறுவனத்துக்காக சார்லி சாப்ளின் தயாரித்த 'The Pilgrim' திரைப்படம் தான் சாப்ளினும், ஏட்னாவும் இணைந்து நடித்த கடைசிப் படம். (அதன்பிறகு, சாப்ளின் வெவ்வேறு கதாநாயகிகளுடன் இணைந்து நடித்தார். என்றாலும், சார்லி சாப்ளின் - ஏட்னா பர்வியான்ஸ் ஜோடிக்குச் சமமாக, வேறு எந்த இணையையும் சொல்லமுடியாது !)




1923ம் ஆண்டுக்குப் பிறகு, சார்லி சாப்ளினின் படங்களில் ஏட்னா நாயகியாக நடிக்கவில்லை. என்றாலும், அவர்கள் இருவருக்கும் இடையே இருந்த நட்பில் எந்தக் குறையும் இல்லை. சாப்ளின் வெளிநாடுகளுக்குச் சென்றாலும் கூட, ஏட்னாவின் அன்பான கடிதங்கள் அவரை அடிக்கடி நலம் விசாரிக்கும். ஒவ்வொரு கடிதத்தின் இறுதியிலும், தவறாமல் ஒரு நகைச்சுவைத் துணுக்கு ! ஏட்னாவின் நடிப்புத் திறன், நகைச்சுவைப் படங்களைத் தாண்டியும் வெளிப்பட வேண்டும் என்று விரும்பிய சார்லி சாப்ளின், அவருக்காகவே 'A Women of Paris' என்ற திரைப்படத்தை இயக்கித் தயாரித்தார். இந்தப் படத்தில் கதாநாயகியாக நடித்த ஏட்னாவுக்கு, ரொம்பவும் சவாலான கதாபாத்திரம். அதை மிகச் சிறப்பாய்ச் செய்திருந்தார் அவர். ஆனால், இந்தப் படம் நன்றாக ஓடாத காரணத்தால், ஏட்னாவால் தனக்குரிய புகழைப் பெறமுடியவில்லை. இதில் சாப்ளினுக்கும் ரொம்ப வருத்தம். அதைத் தொடர்ந்து, ஏட்னா பர்வியான்ஸ் வேறு சில படங்களில் நடித்தார். ஆனால், எந்தப் படமும் அவருடைய 'பழைய' புகழ் வெளிச்சத்தை அவருக்குத் திரும்பப் பெற்றுத் தரவில்லை. சாப்ளினே அவருக்காக இன்னொரு படம் தயாரித்தார், ஆனால் அந்தப் படம் வெளியாகவே இல்லை. அதன் பின், ஏட்னா படங்களில் நடிக்கவில்லை. என்றாலும், 1958ம் ஆண்டு ஏட்னா மரணமடையும் வரை, அவரைத் தன் நிறுவனத்தின் கலைஞராகவே மதித்து, வாரம் தவறாமல் அவருக்கு சம்பளம் அனுப்பிக் கொண்டிருந்தார் சார்லி சாப்ளின். சாப்ளினின் வாழ்க்கையில் 'முதல் கலகப் போர்' என்று பேச ஆரம்பித்து, எங்கெங்கோ போய் விட்டோம்.



இப்போது மீண்டும் அந்த விஷயத்துக்குத் திரும்புவோம். சார்லி சாப்ளின் திரைப் படங்களில் நடிக்கத் தொடங்கியபோது, அவருக்கு வயது 25. அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள், உலகப் புகழ்பெற்ற நட்சத்திரமாகவும், அமெரிக்காவின் பெரும் பணக்காரக் கலைஞர்களில் ஒருவராகவும் விஸ்வரூபம் எடுத்தார் சாப்ளின். இப்படிப்பட்ட ஒருவர், முப்பது வயதை நெருங்கியும், இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் தனியாகவே வாழ்கிறார் என்றால், சுற்றியிருக்கிறவர்களும், பத்திரிகைக்காரர்களும் சும்மா இருப்பார்களா ? 'எப்போ கல்யாணம் ?', 'யாரைக் கல்யாணம் ?', என்று அவரைப் பிய்த்துப் பிடுங்க ஆரம்பித்தார்கள். அவர்களுக்கெல்லாம், தன்னுடைய டிரேட் மார்க் புன்னகையால் பதில் சொல்லி சமாளித்துக் கொண்டிருந்தார் சார்லி சாப்ளின். ஆனால், உள்ளுக்குள், 'எனக்குத் திருமணமெல்லாம் சரிப்படுமா ?', என்ற ஒரு கேள்வி அவரை உறுத்திக் கொண்டிருந்தது. ஒரு பெண்ணை மணக்கிற போது, அதோடு தனது சுதந்திரமும் மொத்தமாய்க் காணாமல் போய் விடும் என்று அவர் உறுதியாக நம்பினார். கல்யாணம் என்றால் சாதாரண விஷயமா ? இப்போது, ஒரு சிறிய அறையில் தங்கிக்
கொண்டு, இஷ்டப்பட்ட நேரத்தில் ஸ்டூடியோவுக்குச் சென்று, வெகுநேரம் வரை பணியாற்றி, படங்களைத் திட்டமிட்டு, படமாக்கி, வெளியிடும் சவுகர்யம், திருமணத்துக்குப் பின் கிடைக்குமா ? மனைவி, வீடு, சேமிப்பு, குழந்தைகள், மருத்துவமனை, பள்ளிக்கூடம் என்று ஒரு பெரிய சுழலில், வலியச் சென்று மாட்டிக் கொள்ளவேண்டுமா ? தவிர, குடும்ப வாழ்க்கையில் நிகழச் சாத்தியமுள்ள குழப்பங்களும், பிரச்சனைகளும், தன்னுடைய படங்களின் தரத்தை பாதித்துவிடுமோ என்றும் சாப்ளினுக்கு பயமாய் இருந்தது. இப்படிப் பலவிதமான காரணங்களால் தான், சார்லி சாப்ளின் தன்னுடைய திருமணத்தைத் தள்ளிப் போட்டுக் கொண்டே இருந்தார். அதைப்பற்றி தீவீரமாய் நினைக்கக் கூட நேரமில்லாதபடி, அவருடைய திரைப்படங்களும், அதுசார்ந்த பணிகளும் அவரை எந்நேரமும் பரபரப்பாய் வைத்திருந்தன.



1918ம் ஆண்டு, ஒரு விருந்தில் மில்ட்ரெட் ஹாரிஸ் (Mildred Harris) என்ற அழகான இளம் நடிகையைச் சந்தித்தார் சார்லி சாப்ளின். அப்போது சாப்ளினுக்கு வயது இருபத்தொன்பது. மில்ட்ரெடுக்கு, பதினாறு ! கண்ணே இல்லாத காதலுக்கு, வயதா முக்கியம் ? சாப்ளினுக்கும், மில்ட்ரெடுக்கும் இடையே சட்டென்று உதயமான காதல், அதே வேகத்தில் வளர்ந்து, திருமணத்தில் முடிந்தது. சார்லி சாப்ளின் - மில்ட்ரெட் ஹாரிஸ் இருவரின் 'திடீர்' திருமணம், 1918ம் ஆண்டு அக்டோபர் 23ம் நாள் நடைபெற்றது.



ஏட்னாவைத் திருமணம் செய்து கொள்ள எண்ணிய போது, ரொம்பவும் தயங்கி, கடைசி வரை ஒரு உறுதியான முடிவை எடுக்காத சார்லி சாப்ளின், மில்ட்ரெட் ஹாரிஸ் விஷயத்தில் மட்டும் இப்படி திடுதிப்பென்று தீர்மானித்து, சட்டென்று திருமண ஏற்பாடுகளைச் செய்து முடித்தது எல்லோருக்குமே பெரிய ஆச்சரியம் தான். ஆனால், இப்படி அவசரமாய் முடிவெடுத்த சார்லி சாப்ளின், அடுத்த சில மாதங்களுக்குள், அதற்காக ரொம்பவும் வருந்த வேண்டியிருந்தது. நடந்து முடிந்த திருமணத்தின் பரபரப்புகள் ஓய்வதற்குள், சாப்ளினுக்கும், அவருடைய மனைவி மில்ட்ரெடுக்கும் இடையே பிரச்சனைகள் தொடங்கி விட்டன. அது வரை நிம்மதியாய் ஒற்றை அறையில் வாழ்ந்து கொண்டிருந்த சார்லி சாப்ளின், இப்போது தன் மனைவியோடு ஒரு தனி வீட்டுக்குக் குடி பெயர்ந்தார். ஆனால், எந்நேரமும் தன்னுடைய திரைப் படங்களைப் பற்றிய சிந்தனைகள், திட்டங்கள், பணிகளோடு வாழ்ந்து பழகிவிட்ட சாப்ளின், திருமண வாழ்க்கையின் எதிர்பார்ப்புகளுக்குள், கட்டாயங்களுக்குள் பொருந்த முடியாமல் திணறினார். இதனால், அவருக்கும் அவர் மனைவிக்கும் நடுவே ஏகப்பட்ட சண்டை. போதாக்குறைக்கு, இன்னொரு பெரிய பிரச்சனை - இன்னும் பதின்ம வயதைத் தாண்டியிராத மில்ட்ரெட் ஹாரிஸ், கருவுற்றார். இத்தனை இளம் வயதில் குழந்தை பெறுவது கொஞ்சம் ஆபத்தான விஷயம் என்பதால், அந்தக் கவலையும் சாப்ளினை வாட்டியது. இப்படி ஏகப்பட்ட பிரச்சனைகளுக்கு நடுவே சிக்கிக் கொண்டிருந்த சாப்ளின், மன அமைதி கெட்டு, தன்னுடைய தொழிலில் கவனம் செலுத்த முடியாமல் திணறினார். இந்தக் கால கட்டத்தில் அவர் இயக்கிய, நடித்த படங்கள் எல்லாமே, 'சுமார்' ரகம் தான். இந்த விஷயம் சார்லி சாப்ளினுக்கும் நன்றாகவே புரிந்திருந்தது. ஆனால், இந்தப் பிரச்சனையிலிருந்து விலகி, வெளி வரும் நுட்பம் தான் அவருக்குத் தெரியவில்லை. அடுத்து, என்ன செய்வதென்று புரியாமல் தவித்தார் அவர். ரொம்ப சிரமமான காலகட்டம் அது. சாப்ளினுக்கு இரண்டு பக்கமும் இடி. 'எப்போதும் ஸ்டூடியோ தானா ? நாள் முழுதும் வேலை தானா ? வீட்டிலிருக்கும் பெண்டாட்டியை கவனிக்கவே மாட்டீர்களா ?', என்றெல்லாம் வீட்டில் அவளுடைய மனைவி கத்துகிறாள். அவளைப் பார்க்க வேண்டாம் என்று படப்பிடிப்புத் தளத்துக்கு வந்தால், வேலையே ஓடுவதில்லை. பிடிவாதமாய் முயன்றாலும், உருப்படியில்லாத காட்சிகளாகத் தான் வந்து குவிகிறது.




என்ன ஆயிற்று எனக்கு ? என்னுடைய பழைய வேகம் எங்கே ? பழைய சுறுசுறுப்பு எங்கே ? பழைய திறமை எங்கே ? இப்படி சாப்ளின் பலவிதமாய்க் குழம்பிக் கொண்டிருந்த போது, 1919ம் ஆண்டு ஜுலை ஏழாம் தேதி, அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. இந்தச் செய்தியைக் கேள்விப் பட்டதும், சார்லி சாப்ளின் தனது கவலைகள் எல்லாவற்றையும் மறந்து, உலகளவு சந்தோஷத்தில் திளைத்தார். தன் மகனுக்கு 'நார்மன் ஸ்பென்ஸர் சாப்ளின்' என்று பெயர் வைத்தார் சார்லி சாப்ளின். குழந்தையின் அம்மா மில்டெர்ட் சாப்ளின், அவனை 'என் செல்ல எலிக்குஞ்சு', என்று கொஞ்சினாள். ஆனால் சாப்ளின் - மில்ட்ரெட் தம்பதியின் அந்தச் செல்ல எலிக்குஞ்சு, மொத்தம் மூன்றே நாள்கள் தான் உயிர் வாழ்ந்தது. மகன் வந்த வேளை, இனிமேல் தங்களின் பிரச்சனைகள் எல்லாம் தீர்ந்து விடும் என்று உறுதியாய் நம்பிக் கொண்டிருந்த சாப்ளினை, இந்த மரணச் செய்தி தாக்கி உலுக்கியது. கொடுப்பது போல் கொடுத்து, அந்த சந்தோஷத்தை அனுபவிப்பதற்குள், யாரோ அதைப் பறித்துக் கொண்டு ஓடி விட்டதுபோன்ற ஏமாற்றத்துடன், ஆழ்ந்த சோகத்தில் மூழ்கினார் சார்லி சாப்ளின். இந்த மரணத்துக்குத் தானும் ஒரு விதத்தில் காரணமாகி விட்டோமே என்று நினைக்கும் போத
ு நியாயங்களை, தனது மனப் புழுக்கங்களை வெளிப்படையாய்ச் சொன்னார். 'சுயநலம் பிடித்த, தொலை நோக்குப் பார்வை இல்லாத கும்பல்', என்று 'ஃபர்ஸ்ட் நேஷனல்' நிறுவனத்தினரைப் பற்றிச் சொல்லி விட்டு, அங்கிருந்து வெளியேறினார் அவர். இந்தக் கசப்பான அனுபவங்களுக்குப் பிறகு, சார்லி சாப்ளின் எப்போதும் வெளி நிறுவனங்களை நம்பித் தன்னுடைய படங்களை எடுக்கவில்லை. அவரே தனது படங்களை எழுதி, இயக்கி, தயாரித்து, வெளியிட்டார். ஒரு விதத்தில், இது எல்லோரும் எதிர்பார்த்த விஷயம் தான். ஒவ்வொரு வருடமும் தனது சம்பளத்தைக் கொஞ்சம் கொஞ்சமாய் உயர்த்திக் கொண்டே இருந்த சார்லி சாப்ளின், ஒரு கட்டத்தில் திரைத் துறையிலேயே மிக அதிக சம்பளம் வாங்கும் நட்சத்திரமாகி விட்டார். அவருடைய திறமைக்கும், தகுதிக்கும் அந்த சம்பளம் நியாயமானது தான். என்றாலும், அந்த அளவு சம்பளத்தைக் கொடுப்பதற்கு எந்தப் பட நிறுவனத்தாலும் முடியவில்லை. ஆகவே, அவரே தனது படங்களைத் தயாரித்துக் கொள்வது தான் ஒரே வழி என்றானது.



1923ம் ஆண்டு, 'யுனைடட் ஆர்ட்டிஸ்ட்ஸ்' நிறுவனத்துக்காக சார்லி சாப்ளின் எழுதி, இயக்கித் தயாரித்த முதல் படம், 'A Woman of Paris'. ஆனால், ஒரே ஒரு காட்சியில் சுமை தூக்கும் போர்ட்டராக தலை காட்டியது தவிர, இந்தப் படத்தில் அவர் நடிக்கவில்லை. அது வரை தனது படங்களில் நாயகியாக நடித்துக் கொண்டிருந்த ஏட்னா பர்வியான்ஸுக்கு முக்கியத்துவம் தந்து இந்தப் படத்தை உருவாக்கினார் அவர். பேச்சோ, இசையோ இல்லாத அந்தக் கால மௌனப் படங்களில், வெளிப்படையான காட்சிகளின் வழியேதான் எல்லா விஷயங்களையும் சொல்லியாக வேண்டும். ஆனால், 'A Woman of Paris' திரைப்படத்தில், இந்தக் கட்டுப்பாட்டை மீறி, பல மனோதத்துவக் கருத்துகளை, நுணுக்கமான காட்சிகளின்மூலம் சொல்ல முயன்றார் சார்லி சாப்ளின். ஆனால், அவருடைய இந்த முயற்சி, வெகுஜனங்களை முறைப்படி சென்று சேரவில்லை. ஏனெனில், சார்லி சாப்ளினின் படம் என்றதும், அவருடைய வழக்கம் போல், கலகலப்பான, ஆனால் அழுத்தமான ஒரு படத்தைப் பார்க்கப் போகிறோம் என்று தான் அவர்கள் எதிர்பார்த்திருந்தார்கள். அப்படியில்லாமல், திடுதிப்பென்று அவர் ஒரு வித்தியாசமான படத்தை முயன்றதால், அவர்கள் ஏமாந்து போய் விட்டார்கள். நம் ஊர் ரஜினிகாந்த் திடீரென்று ஒரு பக்திப் படத்தில் சாதுவாக நடித்தால், அவருடைய ரசிகர்கள் ஏமாந்து போய் திரையைக் கிழிப்பது போல ! மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளிவந்த சார்லி சாப்ளினின் 'A Woman of Paris' திரைப்படம், படு தோல்வி அடைந்தது. ஏற்கெனவே மோசமான நிதி நிலைமையில் தள்ளாடிக் கொண்டிருந்த 'யுஏ' நிறுவனம், இப்போது மொத்தமாய் தடுமாறிக் கீழே விழுந்து விட்டது. நல்ல வேளையாக, இந்தத் தோல்வியால் சார்லி சாப்ளின் துவண்டு போய் விடவில்லை. அவர் எப்போதும் போன்ற உற்சாகத்துடனும், தெம்புடனும் தனது பணிகளைத் தொடர்ந்து கொண்டிருந்தார்.



'யுஏ' நிறுவனம் இப்போது நஷ்டத்தில் இருப்பதால், வெளியாள்கள் அதன் நடவடிக்கைகளில் தலையிட்டு, அதை விலைக்கு வாங்கி விழுங்கி விடுகிற உத்தேசத்தில் இருந்தார்கள். ஆனால், எந்தச் சூழ்நிலையிலும் அதை மட்டும் அனுமதிக்கக் கூடாது என்று உறுதியாய் இருந்தார் சார்லி சாப்ளின், 'என்னுடைய அடுத்த படம் நிச்சயமாய் வெற்றியடையும், அந்த லாபத்தில், இந்தக் கம்பெனி மீண்டும் உயிர்த்தெழும் !', என்று அசைக்க முடியாத நம்பிக்கையுடன் சொன்னார் அவர். அவர் சொன்னது அப்படியே நடந்தது. சார்லி சாப்ளினின் அடுத்த படமான 'The Gold Rush' வரலாறு காணாத வெற்றியடைந்து, 'யுனைடட் ஆர்ட்டிஸ்ட்' நிறுவனத்திற்குப் புத்துயிர் தந்தது !



1925ம் ஆண்டு வெளிவந்த 'The Gold Rush' திரைப்படத்தைப் பற்றிச் சொல்லும் போது, 'இந்த ஒரு திரைப்படத்துக்காகதான் எல்லோரும் என்னை நினைவில் வைத்திருக்க வேண்டும் என விரும்புகிறேன்', என்றார் சார்லி சாப்ளின். அதற்கேற்ப, தங்க வேட்டையைப் பின்னணியாய்க் கொண்ட இந்தத் திரைப்படம், சாப்ளினின் மறக்க முடியாத திரைக் காவியங்களில் ஒன்றாக உருவானது. இந்தப் படம் உருவாகிக் கொண்டிருந்த போது தான், அதில் நாயகியாக நடிக்கத் தேர்வாகியிருந்த லிடா க்ரேவுக்கும், சார்லி சாப்ளினுக்கும் திருமணம் நடை பெற்றது.




பின்னர் அந்த நாயகி கதாபாத்திரத்தை ஜியார்ஜியா ஹேல் ஏற்று நடித்தார். 'The Gold Rush' திரைப்படம் வெளியாகும் நேரத்தில், சார்லி சாப்ளினின் உடல் நிலை திடீரென்று மிக மோசமாய் பாதிக்கப்பட்டது. அவர் பல மாதங்களாய் ஓய்வின்றி தொடர்ந்து படப்பிடிப்பிலும், அதுதொடர்பான பணிகளிலும் ஈடுபட்டுக் கொண்டிருந்தது தான் இதற்குக் காரணம் என்று சொன்ன மருத்துவர்கள், அவரைக் கட்டாய ஓய்வில் தள்ளினார்கள். ஆனால், அந்த ஓய்வைக் காட்டிலும், தனது புதிய படம் மாபெரும் வெற்றியடைந்திருக்கும் செய்தி தான், சார்லி சாப்ளினை மீண்டும் பழைய உற்சாக மனநிலைக்குத் திரும்பச் செய்தது. அவர் தன்னுடைய அடுத்த படத்திற்கான பணிகளைத் தொடங்கினார். சார்லி சாப்ளினின் அடுத்த திரைப்படம், ஒரு சர்க்கஸ் குழுவின் பின்னணியில் அமைந்தது. 'The C
ை சாப்ளினை ஒரு பெரிய பணக்காரர் என்று எண்ணியிருந்த அந்தப் பெண், உண்மையில் அவர் ஏழை, நாடோடி என்று தெரிந்து கொண்டு, ஏமாற்றமடைகிறாள். இதைப் புரிந்து கொண்ட சாப்ளினும், தன் நிலை உணர்ந்து, கூனிக் குறுகுகிறார். உணர்ச்சிப் போராட்டமாய்ப் பதிவாகியிருக்கும் இந்த இறுதிக் காட்சி, விமர்சகர்கள், ஆர்வலர்களால் மிகவும் ரசித்து, சிலாகிக்கப் பட்டது.



பல்வேறு 'பேசும் பட'ங்களுக்கு இடையே 1931ம் ஆண்டு வெளி வந்த 'City Lights' திரைப்படம், மிகப் பெரிய வெற்றியடைந்தது. அந்தச் சமயத்தில் வெளியான வேறு எந்த 'டாக்கி'யையும் விட, அதிக அளவு வசூல் சம்பாதித்தது இந்த 'பேசாப் படம்'. ஒரு திரைப்படம் ஜெயிக்க வேண்டுமானால், அதற்குப் புதிய தொழில் நுட்பம் மட்டும் போதாது என்றும், அழுத்தமான கதை, சிறப்பான நடிப்பு, அற்புதமான இயக்கம் ஆகியவை, எந்தச் சூழ்நிலையிலும் ஒரு படத்தை வெற்றியடையச் செய்யும் என்றும் நிரூபித்தது 'City Lights'.


இதையடுத்து, 1936ம் ஆண்டு வெளிவந்த சாப்ளினின் 'Modern Times' திரைப்படமும், பேசாத படம் தான். இந்தப் படத்திலும் பின்னணி இசை உண்டு. ஆனால், வசனங்கள் கிடையாது - ஒரே ஒரு காட்சியில், சார்லி சாப்ளின் குழப்பமாக ஏதோ பேசுகிறார், அல்லது பாடுகிறார். இந்தப் படமும் பெரிய வெற்றியடைந்தது. பேசும் படங்களின் காலத்தில், பேசாமலே ஜெயிக்கும் சார்லி சாப்ளினுக்குப் பாராட்டுகள் குவிந்தன. ஆனால், இந்தப் படம் வெளிவந்த சமயத்தில், சார்லி சாப்ளின் ஒரு தர்மசங்கடமான நிலைமையில் சிக்கிக் கொண்டிருந்தார்.



ஹாலிவுட்டில் சாப்ளின் ஒருவரைத் தவிர, மற்ற தயாரிப்பாளர்கள், கலைஞர்கள் எல்லோரும் பேசும் படங்களுக்குத் தாவியாயிற்று, இவர் ஒருவர் தான், இன்னும் பேசாப் படங்களை எடுத்துக் கொண்டிருந்தார். அவருடைய படங்கள் வெற்றியடைகின்றன என்பது வேறு விஷயம். ஆனால், தன்னோடு 'மௌனப் பட'ங்களுக்கு ஆதரவாய் யாருமே இல்லாத போது, சார்லி சாப்ளின் ரொம்பவும் தனிமையாய் உணர்ந்தார். முன்பு அவர் எண்ணியது போல், மௌனப் படங்களும், பேசும் படங்களும் தனித்தனி கலைப் பிரிவுகளாய் வளரவில்லை. 'பேசும் படம் வந்தாச்சு, இனிமே மௌனப்படம் வேண்டாம்' என்று கிடப்பில் தூக்கிப் போட்டு விட்டார்கள். சார்லி சாப்ளினோடு புகழ் பெற்றிருந்த மௌனப் பட நட்சத்திரங்கள் எல்லோரும், பேசும் படங்களுக்குத் தகுந்தாற் போல் தங்களை மாற்றிக் கொண்டிருந்தார்கள். அல்லது, சினிமாவிலிருந்தே ஓய்வு பெற்றிருந்தார்கள். இப்போது, சாப்ளினும், இந்த இரண்டில் ஏதேனும் ஒன்றைத் தேர்வு செய்தாகவேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டிருந்தார்.



என்ன செய்வது ? - பேசாமல்(?) எல்லோரையும் போல் நாமும் பேசும் படங்களை எடுக்கத் தொடங்கிவிடலாமா ? அல்லது 'போதும்டா சாமி', என்று சினிமாவுக்கு முழுக்குப் போட்டு விடலாமா ? பலத்த யோசனைக்குப் பிறகு, சார்லி சாப்ளின் பேசும் படங்களை எடுப்பதாக முடிவு செய்தார். ஆனால் அதேச மயம், தன்னுடைய புகழ் பெற்ற 'ட்ராம்ப்' கதாபாத்திரம், எப்போதும் ஒரு மௌன நாயகனாகத் தான் இருக்க வேண்டும் என்பதில் அவர் பிடிவாதமாய் இருந்தார். ஆகவே, 'Modern Times' திரைப் படத்துடன், 'ட்ராம்ப்' பாத்திரம் முடிவுக்கு வந்தது. சாப்ளினின் முதல் 'பேசும் படம்' (The Great Dictator) 1940ம் ஆண்டு வெளிவந்தது.



அதன் பின் அவர் மேலும் நான்கு 'பேசும் பட'ங்களை எடுத்தார். என்றாலும், அவருடைய மௌனப் படங்கள் அடைந்த புகழோடு ஒப்பிடுகையில், இந்தப் படங்கள் 'சுமார்' என்ற அளவில் தான் மக்களைக் கவர்ந்தன. அது மட்டுமில்லை. சார்லி சாப்ளின் இயக்கி நடித்த 'பேசும் பட'ங்களில் கூட, பேசாத சில காட்சிகள் தான் அதிகப் புகழடைந்தன.


உதாரணமாக, 'The Great Dictator' திரைப்படத்தில், முதன்மைக் கதாபாத்திரமாகிய சர்வாதிகாரி (சார்லி சாப்ளின்), ஒரு உலக உருண்டை பொம்மையோடு நடனமாடும் காட்சிகள். இந்த 'சர்வாதிகாரி' கதாபாத்திரம், சாப்ளினுக்குப் பல பாராட்டுகளையும், சில வீண் வம்புகளையும் கொண்டு வந்தது. உண்மையில், இந்த கலாட்டாவெல்லாம், சாப்ளினின் முந்தைய படமாகிய 'Modern Times' வெளியான போதே தொடங்கி விட்டது. அப்போதிலிருந்து, கவனமாய்த் திட்டமிட்டு, அவர் மீது சிவப்புச் சாயம் பூசப்பட்டது.

என். சொக்கன்.



*பகிர்வு*

*┈┉┅━❀•ℙᏉᎫℙ•❀━┅┉┈​​​​​​​​​​*
ம் படங்கள், மௌனப் படங்கள் - இரண்டும் ஒன்றையொன்று முறைத்துக் கொண்டு போட்டியிடும் எதிரிகள் என்று ஏன் நினைக்க வேண்டும் ? இந்த இரண்டுமே ஒன்றாக வளர முடியாதா என்ன ? இந்தக் கணினிக் காலத்திலும், சிலர் அற்புதமான பென்சில் தீற்றல் ஓவியங்களை வரைந்து கொண்டிருப்பது போல், பேசும் படங்கள் வந்து விட்ட பிறகும், தனக்குப் பரிச்சயமான மௌனப் படங்களைத் தொடர சார்லி சாப்ளின் விரும்பினார். தவிர, திரைப்படங்களில் ஒலியைச் சேர்க்கும் தொழில் நுட்பம், அப்போது தான் உருவாகி, இன்னும் ஆரம்ப நிலையில் தான் இருந்தது. ஆகவே, அந்தக் காலப் பேசும் படங்கள், பெரும்பாலும் 'இரைச்சல்'களின் தொகுப்பாகவே இருந்தன. ஆகவே, இந்தப் படங்களைப் பார்த்து ஏமாற்றத்துடன் உதட்டைப் பிதுக்கிய சார்லி சாப்ளின், இந்த 'அரைகுறை' தொழில் நுட்பம் இன்னும் கொஞ்சம் முதிர்ச்சியடையட்டும், அதன் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று நினைத்தார். தவிர, மக்களைச் சிரிக்க வைப்பதற்கு வசனங்கள் தேவையில்லை என்று சாப்ளின் நம்பினார். 'மௌனப் படங்களில், ரசிகன் தன்னைப் படத்தோடு பொருத்திக் கொண்டு ரசிக்க முடியும். பேசும் படங்களில் அது சாத்தியமில்லை. எல்லாவற்றையும் உடைத்துச் சொல்லி விடுவதால், திரை ஊடகத்தின் அழகே நாசமாகி விடுகிறது', என்று கருத்து தெரிவித்தார் அவர்.



'என்னுடைய படங்கள் பேசவேண்டாம்', என்ற சார்லி சாப்ளினின் முடிவிற்கு, இன்னொரு காரணமும் உண்டு. அவருடைய படங்கள் அனைத்தும், உள்நாட்டை விட, வெளிநாட்டில் தான் பிரமாதமாய் ஓடி வசூல் சேர்த்தன. இந்த நிலைமையில், தன் படங்கள் (ஆங்கிலத்தில்) பேசத் தொடங்கி விட்டால், அந்த மொழி அறியாத வெளிநாட்டு ரசிகர்கள் அவற்றை நிராகரித்து விடுவார்களே என்பது சாப்ளினின் நியாயமான கவலை ! இப்படிப் பல்வேறு காரணங்களால், தன்னுடைய படங்களில் வசனங்களைச் சேர்ப்பதில்லை என்று சார்லி சாப்ளின் முடிவு செய்தார். ஆனால், இதைச் செயல் படுத்துகையில், அவர் பலவிதமான எதிர்ப்புகள், கேலி, கிண்டல்களைச் சந்திக்க வேண்டியிருந்தது.



இவ்வளவு ஏன் ? அவருடைய 'யுனைடட் ஆர்ட்டிஸ்ட்' நிறுவனத்தில் உள்ளவர்கள் சிலரே, சாப்ளினின் இந்த முடிவை எதிர்த்தார்கள். இது பற்றி ஒரு சுவாரஸ்யமான குறிப்பு உள்ளது. சார்லி சாப்ளினோடு பணியாற்றும் ஒரு தொழில் நுட்பக் கலைஞர், அவரிடம் சொல்கிறார், 'சாப்ளின், காலம் மாறி விட்டது, இனிமேல் நீங்கள் மௌனப் படங்கள் எடுக்கக்கூடாது. உடனடியாக டாக்கி-க்கு மாறி விடுங்கள் !' 'அதெல்லாம் முடியாது', பிடிவாதமாய்ச் சொல்கிறார் சார்லி சாப்ளின், 'வேண்டுமானால், நீங்கள் தனியாக ஒரு டாக்கி எடுத்துக் கொள்ளுங்கள், தயவு செய்து என்னை இந்த விஷயத்தில் இழுக்காதீர்கள்' 'பிடிவாதம் செய்யாதீர்கள் சாப்ளின்', அந்த இன்னொருவர் தொடர்ந்து சாப்ளினை வற்புறுத்துகிறார், 'நீங்கள் மட்டும் ஒரு டாக்கி எடுத்தால், நம் கம்பெனி பக்கெட், பக்கெட்டாய்ப் பணம் பண்ணலாம்' இப்போது, சாப்ளினிடம் ஒரு சிறு மௌனம். பிறகு, கம்பீரமான குரலில் அவருடைய முடிவான கருத்து வருகிறது, 'நான் ஒரு இயக்குனர், எனக்கு நல்ல படம் பண்ணுவதில் தான் ஆசை, பக்கெட் பக்கெட்டாய்ப் பணம் பண்ணுவதெல்லாம் இரண்டாம் பட்சம் தான் !' இப்படியாக, தன்னுடைய படங்களில் வசனத்தைச் சேர்ப்பதில்லை என்ற முடிவில் உறுதியாக இருந்த சார்லி சாப்ளின், 'பேசும் படம்' என்ற புதிய தொழில் நுட்பத்தின் இன்னொரு அம்சமாகிய 'இசை'யை மட்டும் தன் படங்களில் சேர்த்துக் கொள்ள இணங்கினார். இந்தச் சலுகைக்கு முக்கியமான காரணம், தனது மௌனப் படங்களோடு, பொருத்தமான இசையைச் சேர்க்கிற போது, அவை வேறொரு தளத்துக்கு உயரும் என்று சார்லி சாப்ளின் நம்பியது தான்.



தவிர, சிறுவயதிலிருந்தே இசை நிகழ்ச்சிகள், மேடைகள் என்று வலுவான இசைப் பின்னணியில் வளர்ந்த சார்லி சாப்ளின், தன் படங்களுக்குத் தானே இசையமைக்க விரும்பினார். இதன்படி, சார்லி சாப்ளினின் அடுத்த திரைப்படமாகிய 'City Lights', வசனங்கள் இல்லாத, ஆனால் இசையோடு கூடிய திரைப்படமாய் வெளிவரும் என்று அறிவிப்புகள் வந்தன. இதைக் கேள்விப்பட்ட பலரும், சார்லி சாப்ளினை கேலி செய்து மகிழ்ந்தார்கள். 'மற்றவர்கள் எல்லோரும் மௌனப் படத்தைத் தலை முழுகி விட்ட பின், இவர் மட்டும் ஏன் இப்படிப் பழைய பஞ்சாங்கமாய் இருக்கிறார் ?', என்று கிண்டல் செய்யும் விவாதங்கள் தொடங்கின. ஆனால், இந்தச் சலசலப்புகளுக்கெல்லாம் சார்லி சாப்ளின் கொஞ்சமும் அசரவில்லை. அவர் தன்னுடைய முடிவில் உறுதியாக இருந்தார். 'மக்கள் என்னைப் பார்ப்பதற்குத் தான் திரையரங்கிற்கு வருகிறார்கள்', என்று நிச்சயமாய் எண்ணிய அவர், தன்னுடைய படம் பேசாவிட்டாலும், 'பேசப்படும்' என்று நம்பினார்.


சாப்ளினின் 'City Lights' ஒரு உணர்ச்சிமயமான கதை. கண் பார்வை இல்லாத ஒரு பெண்ணைச் சந்திக்கும் நாடோடி சாப்ளின், அவளுக்குப் பலவிதமான உதவிகளைச் செய்கிறார். அவளுக்குப் பார்வை கிடைப்பதற்கும் காரணமாய் இருக்கிறார். ஆனால், அந்தப் பெண்ணுக்குப் பார்வை திரும்பியதும், அவள் சாப்ளினைப் பார்த்து அதிர்ச்சியடைகிறாள். அது வர
*இப்படிக்கு 🏹 காலம்*

*பகிர்வு*

*┈┉┅━❀•ℙᏉᎫℙ•❀━┅┉┈​​​​​​​​​​*

*இணையற்ற நகைச்சுவை நாயகன் சார்லி சாப்ளின் வாழ்க்கை வரலாறு!*



*13. The Knockout*


சார்லி சாப்ளினின் 'Modern Times' படத்திலிருந்து, ஒரு சுவாரஸ்யமான நகைச்சுவைக் காட்சி :


தெருவில் அப்பாவியாய் நடந்து கொண்டிருக்கும் சாப்ளினுக்கு முன்னே, ஒரு டிரக் கடந்து செல்கிறது. அந்த வண்டியில் ஒரு சிவப்புக் கொடி கட்டியிருக்கிறது. சாப்ளின் பார்த்துக் கொண்டிருக்கும் போதே, அந்தக் கொடி தவறிக் கீழே விழுந்து விடுகிறது. உடனே, சாப்ளின் அந்தக் கொடியைக் கையில் எடுத்துக் கொண்டு, அந்த வண்டியின் ஓட்டுனரைச் சத்தமாய்க் கத்தி அழைக்கிறார். ஆனால், அவர் எவ்வளவு கத்தியும், அந்த ஓட்டுனர் வண்டியை நிறுத்தாமல் தொடர்ந்து போய்க் கொண்டிருக்கிறார். ஆகவே, எப்படியாவது இந்தக் கொடியை அவரிடம் சேர்த்துவிடவேண்டும் என்ற எண்ணத்துடன், கொடியைக் கையில் ஏந்திக் கொண்டு விறுவிறுவென்று அந்த வண்டியின் பின்னே ஓடுகிறார் சார்லி சாப்ளின். கையில் சிவப்புக் கொடியோடு சாப்ளின் ஓடிக் கொண்டிருக்க, அதைப் பார்த்து, ஏதோ போராட்டம் என்று நினைத்துக் கொண்டு, அவருக்குப் பின்னே ஒரு பெரிய தொழிலாளர் கூட்டமே சேர்ந்து விடுகிறது. அவருக்கே தெரியாமல், ஒரு பெரிய ஊர்வலத்தின் தலைவராகி விடுகிறார் சார்லி சாப்ளின் !



மேற்சொன்னது, ஒரு வேடிக்கையான கற்பனைக் காட்சி தான். ஆனால், நிஜ வாழ்க்கையில், கிட்டத்தட்ட இதே போன்றதொரு தவறான புரிதலும், சில 'பெரிய' மனிதர்களின் திட்டமிட்ட குற்றம் சாட்டுதலும், சார்லி சாப்ளினின் வாழ்க்கையையே தலை கீழாய்த் திருப்பிப் போட்டு விட்டது. இதைப் பற்றி மேலும் விரிவாய்ப் பார்ப்பதற்கு முன், ஆரம்பகாலத்திலிருந்து சார்லி சாப்ளினின் படங்கள் எப்படிப்பட்ட மனிதர்களைப் பற்றிப் பேசிவந்தன என்பதை யோசிக்க வேண்டும். அவருடைய படங்களில் அடிக்கடி வருகிறவர்கள் யார் ? நல்லவர்களாகவும், கெட்டவர்களாகவும் சித்தரிக்கப் படுகிறவர்கள் யார் ? பொதுவாய் அவர்களுக்கு என்னென்ன பிரச்சனைகள் இருப்பதாய்ச் சொல்லப் படுகின்றன ? இந்தப் படங்களின் மூலம், அந்தப் பிரச்சனைகளுக்கு சார்லி சாப்ளின் தரும் தீர்வு அல்லது தீர்வுகள் என்ன ?



இந்தக் கோணத்தில் சிந்திக்கும் போது, ஒரு விஷயம் தெளிவாய்ப் புரியும் - சாப்ளினின் படங்களில் வருகிறவர்கள், பெரும்பாலும் வாழ்க்கையின் அடிமட்டத்தில் வாழும் ஏழைகளாகவும், வீடு, உணவு, உடைகள் போன்ற அடிப்படை வசதிகள்கூட இல்லாத வறுமையில் வாடுகிறவர்களாகவும் இருக்கிறார்கள். இவர்களுடைய அன்றாடப் பிரச்சனைகளைத் தான், இயல்பான நகைச்சுவை கலந்து தருகிறார் சாப்ளின். இதற்கு முக்கியமான காரணம், இளம் வயதில் சார்லியும், அவருடைய குடும்பத்தினரும் அனுபவித்த வறுமைக் கொடுமைகள் தான். அந்த அனுபவங்களின் அடிப்படையில் தான், கீழ்த்தட்டு மக்களின் வாழ்க்கையைப் படம்பிடிக்கத் தொடங்கினார் சாப்ளின். ஆனால், ஏழைகளைப் பற்றிப் பேசும் போது, ஒரு ஒப்பீட்டுக்காகவேனும், சமூகத்தின் மேல்தளங்களில் இருக்கிற பணக்காரர்களைப் பற்றியும் சொல்ல வேண்டியிருக்கிறது. அவர்களிடம் 'ஏராளமாய் உள்ளதை'க் காண்பிக்கும் போது தான், இவர்களிடம் 'கொஞ்சமும் இல்லாத' கொடுமை நன்றாகப் புரியும். சாப்ளினின் யதார்த்தமான இந்தச் சிந்தனை தான், அவர் மீது ஒரு 'கம்யூனிஸ்ட்' முத்திரை விழக் காரணமாகி விட்டது.



1920களிலிருந்தே, சார்லி சாப்ளினின் ஒவ்வொரு படமும், FBI எனப்படும் அமெரிக்க விசாரணை நிறுவனத்தின் சில முக்கிய அதிகாரிகளால் கழுகுப் பார்வையோடு கண்காணிக்கப் பட்டது. இவர் ஏழைகளுக்கு ஆதரவாய்க் கொடி பிடிக்கிறாரா ? பணக்கார வர்க்கத்துக்கு எதிராகப் போரிடும்படி, ஏழைகளைத் தூண்டி விடுகிறாரா என்றெல்லாம் கண்ணில் விளக்கெண்ணை ஊற்றிக் கொண்டு தீவீரமாய் ஆராய்ந்தது ஒரு குழு. இத்தனைக்கும், அப்போது சார்லி சாப்ளின் எடுத்துக் கொண்டிருந்த ஒவ்வொரு திரைப்படமும், நகைச்சுவைக்கு முக்கியத்துவம் தந்து உருவாக்கப்பட்டது தான். ஆனால், அந்தச் சிரிப்புக்கு நடுவே, அவர் ஒரு பெரிய புரட்சிக்குத் திட்டமிட்டுக் கொண்டிருக்கிறாரோ என்று அரசாங்கத்துக்குச் சந்தேகம். அவர்களின் சந்தேகத்திலும் நியாயம் இருந்தது. சினிமா என்ற வலுவான ஊடகத்தின் மூலம், அரசுக்கு எதிரான கருத்துகள் பரப்பப்பட்டால், அவை பெரும்பான்மை மக்களை எளிதாய்ச் சென்று சேர்ந்து, அவர்களை திசை திருப்பிவிடுகிற சாத்தியங்கள் ஏராளம். அதுவும், சார்லி சாப்ளினைப் போன்ற ஒரு பிரபலம், அரசை விமர்சிப்பது போல் ஏதேனும் செய்தால், அவருடைய ரசிகர்களும், பொதுமக்களும் அதைக் கேள்வி கேட்காமல் ஏற்றுக் கொண்டு விடுவார்கள் என்று அவர்கள் பயந்தார்கள். ஆகவே, சாப்ளினின் ஒவ்வொரு அசைவுக்கும், ஏதேனும் உள்நோக்கம் உள்ளதா என்று ஒரு கும்பலே தேடிக் கொண்டிருந்தது.



ஒரு படத்தில் அவர் தன் முதலாளியின் மூக்கில் குத்தி சிரிப்பு மூட்டினால், 'உலகத் தொழிலாளர்களே, ஒன்று கூடுங்கள், உங்கள் முதலாளிகளின் மூக்கில் குத்துங்கள்', என்று அவர் எல்லோரையும் தூண்டிவிட முயல்வதாக அவர
HTML Embed Code:
2024/04/29 12:28:53
Back to Top